பக்கங்கள்

திங்கள், 26 செப்டம்பர், 2011

கனவு வெள்ளைத்திரையில்...

சினிமா என்பதே கண் விழித்துக்கொண்டு காணும் கனவு

"கனவுகள் உள் மனத்துக்கான ராஜ வீதி" - பிராய்டு

சிக்மன்ட் பிராய்ட் கூற்றுப் படி, "கனவு என்பது ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணங்களின் வெளிப்பாடாகும். ஒருவன் உறங்கும் போது, அவனது நினைவிலியின்
செயல்பாடே கனவாகும்."

பொதுவாக மனிதன் உறங்கும் போது இரு நிலைகளில் உறங்குகின்றான். விழி அசைவு நிலை(REM), விழி அசைவில்லா நிலை(NREM).

மனித மனம் என்பது முக்கால் பங்கு நீரில் மூழ்கிய பனிக்கட்டியை போன்றது.


பொதுவாக கனவு நான்கு வகைகளில் தான் வருகின்றது.
  1. அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வருகின்றது.
  2. ஒரு பிரச்னையை தீர்க்கும் வகையில் வருகின்றது.
  3. ஒரு விஷயத்தை முன்னறிவிக்கும் விதமாக வருவது.
  4. உளவியல் சார்ந்த குறியீட்டுகளை குறிப்பிடுவனாக வருவது.
பழங்குடியினர் கனவுகளை கடவுளின் வாக்காகவே கருதுகின்றனர். அவர்கள் வாழ்க்கையையும், கனவையும் ஒரே காலகட்டத்தில் நிகழும் இரண்டு வாழ்க்கையாகப் பார்க்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுடைய தினசரி வாழ்க்கையை விட புனிதமான ஒரு கனவு வாழ்க்கை நிகழ்கிறது. கனவு வாழ்க்கையின் நிகழ்வுகள் அவர்களுடைய சமூகத்தின் பல முக்கிய முடிவுகளை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு மதத்தினரும் கனவை ஒவ்வொரு விதமாக அணுகுகின்றனர்.
சினிமாவில் கனவுக்கட்சிகளுக்கென ஒரு இடம் உள்ளது. ஆனால் அது ஒவ்வொரு நாட்டு திரைப்படத்திற்கும் வேறு படுகின்றது. பொதுவாக தமிழ் திரைப்படங்களில் கனவுக்காட்சிகள் பாடல் காட்சிகளாகவே இடம் பெறுகின்றன. விதி விலக்காக சிவாஜி கணேசன் நடித்த "முதல் தேதி" திரைப்படம் உள்ளது. இப்படம் முழுக்க கனவாகவே உள்ளது. மற்றப்படி அரண்மனையிலும் அயல் நாட்டிலும் டூயட் பட்டு படுவதாகவே அமைகின்றது.

மன நோய்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கனவுகளை புரிந்து கொள்ளுங்கள்.

பிற மொழித் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் பயன்படுத்துவது குறைவு என்பதால் அவர்கள் சற்று வேறு விதமாக கையாளுகின்றனர். அப்படி கனவினை மையமாகக் கொண்டு வெளி வந்த திரைப்படங்களில் இங்க்மர் பெர்க்மனின் wild strawberries திரைப்படமும், அகிரா குரோசவாவின் "dreams" ம் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.
wild strawberries திரைப்படம் பேராசிரியர் borg இன் கடந்த காலம் குறித்த மதிப்பீடுகள், மற்றும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, முக்கியமான மாற்றங்களை பற்றியது.

திரைப்படத்தில் பேராசிரியர் borg அவர்கள் அவரது வாழ்நாள் சாதனைக்கான விருதினை பெறுவதற்காக வேறு ஒரு நகரத்துக்கு செல்கிறார். அதற்கு முன் அவருக்கு வரும் கனவுகளே இத்திரைப்படம்.
பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கையில் தனது குடும்ப புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கையைக் காட்டிலும் சமூகத்தில் சிறந்த மனிதராகவே பேராசிரியர் borg இருந்துள்ளார். இப்படத்தில் கனவுகள் ஆழமான உண்மைகளை சுட்டி கட்டும் ஒரு சாதனமாக இருந்துள்ளது. குதிரை வண்டி, சாலையில் கடந்து செல்லும் போலிஸ், சக்கரம் தனியாக கழன்று உருண்டு ஊடுதல், தன்னுடைய பிணத்தை காணுதல், கல்லூரியில் மீண்டும் சென்று தேர்வு எழுதுவது போன்றவை எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஆனால் முக்கியமான விஷயத்தை கூறுகின்றது.

படத்தின் முதல் கனவு, யாருமற்ற வீதிகளில் பேராசிரியர் நடந்து செல்கிறார். அப்பொழுது ஒரு குதிரை வண்டி வருகிறது. இவர் அருகில் செல்லும் போது சக்கரம் கழன்று தனியாக உருண்டோடுகின்றது. வண்டியில் இருந்து ஒரு சவப்பெட்டி உருண்டு விழுகின்றது. அதில் உள்ளே இருப்பது பேராசிரியர். பேராசிரியர் அதிர்ச்சியில் விழிக்கிறார். இவ்வாறாக கனவு முடிகின்றது.

மற்றொரு கனவு பேராசிரியர் தான் படித்த கல்லூரியில் தேர்வு எழுதுவது போல கனவு காண்கிறார்.
இப்படத்தில் வரும் கனவுகளின் மூலம் பேராசிரியர் borg தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றார். அதே சமயம் அவர் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார். அந்த பரிசினை வாங்க தன்னை முழுமையாக தயார் படுத்திக்கொள்கின்றார்

ஜப்பானிய கனவு:


அகிரா குரோசவாவின் "dreams" திரைப்படம் முழுக்க முழுக்க கனவுகளையே மையமாகக் கொண்டு வந்த திரைப்படம். இத்திரைப்படம் எட்டு கனவுகளின் தொகுப்பாகும். கனவுகளுக்கே உரிய தொடர்சியின்மையும், விசித்திரமும், அபத்தமும் கலந்து எட்டு தனித்தனி கதைகளாக இருந்தாலும் ஒரு பிணைப்பு இருக்கும்.
இத்திரைப்படத்தில் வரும் முதல் கனவு, "sun shine in the rain" சிறுவன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது மழை பெய்யத் தொடங்குகின்றது. அதே வேளையில் வெயிலும் அடிக்கின்றது. அவனது அம்மா வெளியே காய வைத்திருந்த பொருட்களை எடுத்து வீட்டின் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறார். இவனை எதுவும் சொல்லவில்லை. "இன்று வெயிலும் மழையும் சேர்ந்து அடிக்கின்றது. அதனால் காட்டில் நரிகளுக்கு கல்யாணம் நடக்கும். யாரவது பார்த்தால் அவர்களை கொன்றுவிடும். அதனால காட்டுக்கு விளையாடப் போகாதே அதை யாரவது பார்த்தால் அவர்களை கொன்று விடும்" என சொல்லுகின்றார். ஆனால் அந்த பையன் காட்டிற்கு சென்று நரியின் கல்யாணத்தை பார்க்கின்றான். திரும்ப வீட்டிற்கு வருகின்றான். அவனுடைய அம்மா அவனை திட்டுகின்றாள். வானவில் தோன்றும் இடத்தில் நரிகள் இருக்கும், அவையிடம் சென்று மன்னிப்பு கேட்டு வா... இல்லையென்றால் அவை உன்னை கொன்று விடும் என்று கதவை அடைத்து விடுகிறாள். அந்த சிறுவன் அழுது கொண்டே நரியினை தேடி புறப்படுகின்றான். இத்துடன் கனவு முடிகின்றது.

இந்த படத்தில் இடம் பெரும் கனவுகள் எல்லாம் குரோசாவா கண்ட கனவுகளின் தொகுப்பாகும்.
இந்த கனவில் சில முரண்பாடான காட்சிகள் தோன்றுகின்றன. முதலில் இல்லாத கதவு, நரிகளின் உருவம் ஆகியன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக