பக்கங்கள்

புதன், 9 நவம்பர், 2011

அச்சுறுத்தும் அதிர்வுகள் - The Shining

சிறு வண்டு போல ஒரு மஞ்சள் நிற கார், வளைவுகள் நிறைந்த மலைகளுக்கு ஊடே செல்கின்றது. பின்னணியில் அச்ச உணர்வை தூண்டும் வகையில் பின்னணி இசை. அந்த காரில் செல்பவர்களுக்கு ஏதோ நிகழப் போகின்றது என்ற அச்ச உணர்வை படம் பார்பவர்கள் அனைவருக்கும் ஏற்படுத்துகின்றது "The Shinning" திரைப்படம்.

Horror வகை நாவல்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான அமெரிக்காவைச் சார்ந்த Stephen king இன் நாவலைத் தழுவி Stanley Kubrick இயக்கிய திரைப்படம் The Shining. இத்திரைப்படம் எதார்த்தத்திற்கு மீறிய புனைவுக்கதைகள் (மிகைஎதார்த்தம்) வகையைச் சார்ந்தது.

இத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சி, ஏராளமான வளைவுகள் நிறைந்த மலைகளின் ஊடே ஒரு கார், ஒரு தங்கும் விடுதியை நோக்கி செல்லுகின்றது. இக்காட்சிகள் பறவைக் கோணத்தில்(Aerial photography) படம் பிடிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் போது இடம்பெறும் பின்னணி இசையானது, ஏதோ பதட்டமான நிகழ்வு நடைபெற உள்ளதை (fore shadowing technique) முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் உள்ளது.

இத்திரைப் படத்திற்கென பிரத்யேகமாக steady cam வடிவமைக்கப்பட்டது. Stanley Kubrick இதற்கு முன்பு தனது A Clock work Orange திரைப்படத்திற்காககுறைந்த f எண் கொண்ட(f 1/1.21) ஆடியை (லென்ஸ்) வடிவமைத்து பயன்படுத்தினார்.

The Shining திரைப்படம் திகில் படங்களில் தனி முத்திரை பெற்றுள்ளது. வழக்கமான திகில் படங்களில் இருந்து காட்சியமைப்பில் வேறு பட்டு இருந்ததே இதற்கு காரணம்.

தமிழில் வெளிவந்த "சுப்ரமணியபுரம்" திரைப்படமும், இத்திரைப்படத்தின் தொடக்கக்காட்சி ஏற்படுத்தும் உணர்வைப் போன்று ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் தொடக்கக்காட்சி, மதுரை நகரின் இரவுப் பொழுதினை படம் பிடித்தவாறு கேமரா அலைந்து கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல பின்னணி இசையும் உள்ளது.

1 கருத்து: