அமெரிக்காவில் வால்மார்ட் வருகையால் சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என 2008 ஆம் ஆண்டு அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு கூறுகின்றது.
அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி (Iowa state university), ‘கிராமப்புற சமுதாயத்தின் மீது வால்மார்ட் வர்த்தகம் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தலைப்பில் ஆய்வை நடத்தியுள்ளது.
வால் மார்ட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த தொடங்கிய முதல் ஆண்டிலேயே அமெரிக்காவின் 34 நகரங்களில் 2 விழுக்காடு விற்பனை சரிவு மற்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் 47 விழுக்காடு சில்லறை விற்பனை வர்த்தகத்தை வால்மார்ட் கபளீகரம் செய்தது. சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு சரிபாதி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சாதாரண சில்லறை விற்பனை நிறுவனங்கள் என்பது சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளை விடப் பன்மடங்கு பெரியவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வால்மார்ட் வருகையால் இதர சில்லறை விற்பனை நிறுவனங்களின் வியாபாரம் சரிபாதியாக குறைந்தது மட்டுமின்றி சில்லறை விற்பனைத் துறையில் வேலைவாய்ப்பையும் பாதித்தாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது. சில்லறை விற்பனை அங்காடிகளில் வேலை செய்தவர்களின் வருமானம் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலரில் தொடங்கி 1.4 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,50,000 பேர் இதனால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.
இந்திய நாட்டின் சில்லறை வர்த்தகம் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு திறந்துவிடப்பட்டால், அதில் வால்மார்ட் மட்டும் நுழையப்போவதில்லை. அதைவிட பலம் பொருந்திய நெதர்லாந்து நாட்டின் அஹோல்ட் (Ahold), பிரான்ஸ் நாட்டின் கேரிஃபோர் (Carrefour) ஜெர்மன் தேசத்தின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ போன்ற நிறுவனகளும் சேர்ந்தே வரப்போகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ் போன்ற இந்தியப் பெருநிறுவனங்களால் சில்லறை விற்பனை வியாபாரிகள் தள்ளாட்டத்தில் உள்ளார்கள். இந்நிலையில், ரிலையன்ஸையே மிரட்டும் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்ள் சில்லறை வர்த்தகத்தைத் தொடங்கினால் சிறு வியாபாரிகள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டியது தான்.
நான்கு கோடி பேருக்கு வாழ்வளிக்கும் சில்லறை வர்த்தகம், இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 முதல் 11 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இதில் 97 விழுக்காடு முறை சாரா வர்த்தகம். இவர்கள் காலங்காலமாக சில்லறை வர்த்தகம் செய்து வருபவர்கள். இவர்களில் கைவினைஞர்களும் அடக்கம்.
அந்நிய நேரடி மூலதனத்தால் விலைவாசி (பணவீக்கம்) குறையும் என்ற கூற்றும் உண்மை அல்ல. உள்ளூர் சந்தையில் உள்ள சில்லறை விற்பனைப் போட்டியே விலையைக் குறைக்கக் காரணமாக உள்ளது. ஒரே ஒரு விற்பனையாளன் என்ற நிலையில் விலை நிலவரம் மிக மிக அதிகபட்சமாகவே இருக்கும். இன்று இருப்பதைவிட பன்மடங்கு விலைவாசி உயர்வு ஏற்படும் என்பதே உண்மை.
வேளாண்மைத் துறையில் இடைத் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று கூறுவது வெறும் ஒப்பனையே. அந்நிய கம்பெனிகள் விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல் செய்யும் என்பது உண்மைதான் என்றாலும் இடைத்தரகர்களின் பங்கையும் அந்நியக் கம்பெனிகளே எடுத்துக் கொள்ளும் என்பதை கவனிக்கவேண்டும். விவசாயிகளுக்குத் தற்போது கிடைத்து வரும் வருவாயை விட குறைவாகவே கிடைக்கும். காரணம், ஒரு சில மிகப்பெரும் நிறுவனங்களே சந்தையில் இருப்பார்கள். விவசாயிகளிடம் ஒப்பந்த வாணிபம்கூட செய்வார்கள். விவசாய விளைபொருள்களுக்கு, விவசாயிகள் கோரும் விலை கிடைக்காது. பன்னாட்டு கம்பெனிகள் மட்டுமே பொருள்களை வாங்கும் என்பதால், அவர்கள் சொல்லும் விலைக்கு விற்காவிட்டால், விற்பனைக்கு வேறு வழி இல்லை. வாங்க வேறு ஆள் இல்லை என்ற நிலை வந்தால், அடி மாட்டு விலைதானே!
அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் வேளாண் விளைபொருள்கள் வீணாவது தவிர்க்கப்படும் என்று கூற்றில் மட்டும் உண்மை உண்டு. ஆனால் அதனால் நமது விவசாயிகளுக்கு லாபம் இல்லை. இந்த உபரியின் பெரும் பங்கு பன்னாட்டு கம்பனிகளுக்கே செல்லும். நம் நாட்டில் உள்ள பல கூட்டுறவு வேளாண்மை அங்காடிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரும் போது ஆண்டுக்கு அறுபது லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவர் என மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா கூறுகின்றார். ஆனால் அந்நிய முதலீட்டால் உடனடியாக இரண்டரை கோடி பேர் வேலை வாய்ப்பினை இழப்பர்.
நம்மூரில் எட்டாவது பத்தாவது பெயில் ஆனா மளிகைக்கடையில் வேலைக்கு சேர்த்து விடுவர். அந்த பையன் ஒரு ஐந்து ஆண்டுகளில் தனியாக ஒரு சிறு கடையை அவன் தெருவில் தொடங்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவான். ஆனால் வால் மார்ட் போன்ற நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்து முதுகு வளைந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை. அவனால் அதன் பிறகு எந்த வளர்ச்சியையும் தன் வாழ்க்கையில் காண இயலாது.
இன்று தெருவோரக் கடைகளில் கூட தலையாட்டி பொம்மையோ, மரப்பாச்சி பொம்மையோ காணமுடிவதில்லை. எல்லாம் பொசு பொசு கரடி பொம்மையும் நாய் பொம்மையும் தான்.
கிராமங்களில் துண்டு போட்டு மூடி விரல்களில் விலை பேசிய வியாபாரிகள், இன்று அந்த துண்டை தலையில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு உள்ளது நமது இந்திய பொருளாதாரம்.
Iowa state university யின் ஆய்வு :
http://www2.econ.iastate.edu/faculty/stone/10yrstudy.படப்
http://ageconsearch.umn.edu/bitstream/17713/1/ar970189.படப்
கட்டுரைக்கு உதவிய தளம்:
http://www.tamilpaper.net/?p=4999
walmart |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக