பக்கங்கள்

வியாழன், 15 மார்ச், 2012

சாகின்ற வரைக்கும் வாழ்கின்ற வயசு

சாகின்ற வரைக்கும் வாழ்கின்ற வயசு
- பேட்டைக்காரன் வ. ஐ. ச. ஜெயபாலன் 
ஆடுகளம் படத்தில் நடித்த பேட்டைக்காரனை தமிழ் திரைப்பட ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். தான் நடித்த முதல் படத்திலேயே இந்திய அரசின் 2010 ஆம் ஆண்டின் சிறப்பு நடுவண் குழு வழங்கிய தேசிய விருதினை வென்றார். நடிகராக தமிழ் ரசிகர்கள்ளல் அறியப்படுகின்ற இவர் ஓர் ஈழத்துக் கவிஞர். இவர் ஈழத்தின் வன்னிப் பகுதியை சார்ந்தவர். நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர். இவரது பெயர் வ. ஐ. ச. ஜெயபாலன்.
இவர் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் மாணவர்களோடு புதன்கிழமை ( மார்ச், 14, 2012 ) அன்று நடந்த சந்திப்பில் நடைபெற்ற விவாதங்கள்...

ஆடுகளம் படத்தில் நடிப்பதற்காக, மதுரை வட்டார மொழியை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே நான் மதுரையில் தங்கி கற்றுக்கொண்டேன். மடுறரை வட்டார மொழியையும், உடல் மொழியையும் கற்றுத்தர அங்கு பல நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களை எல்ள முடியும். அங்கு "Sit like Kingfisher with Kingfisher"என்பது தான் பாடம்.லாம் தமிழ்நாடு அரசு தான் நடத்துகின்றது. பச்சை நிற போர்டு போட்டு எல்லா இடங்களிலும் உள்ள டாஸ்மாக் பார் தான் அது. இங்குதான் மக்களின் இயல்பான உடல்மொழியையும் பழக்கங்களையும் எளிதில் கற்றுக்கொள்

சினிமாவில் நடிக்க விரும்பும் கனவு கதாபாத்திரம் என்ன?
சினிமாவில் நடிப்பது என்பதே எனது கனவு கிடையாது. கவிஞன் ஆக வாழ்வது தவிர வேறு எதுவும் எனது ஆசையில்லை. மற்றவரை பணிய வைக்காமல், மற்றவரை பணிய அனுமதிக்காமல் வாழ்வதே எனது லட்சியம்.

எழுத்தாளர் - நடிகர் என்ன வேறுபாட்டை உணர்கின்றீர்கள்?
எழுத்து நடிப்பு இரண்டுமே இருவேறுபட்ட கலைவடிவம். கவிஞனாய் இருக்கும் போது எல்லாம் கவிஞனது கட்டுப்பாட்டில் இருக்கும். கவிதை எழுத எதுவும் பெரியதாய் செலவு இல்லை. ஒரு பேனாவும் தாளும் போதும். சினிமாவில் நடிக்கும் போது நடிகன் இயக்குனரது .கட்டுப்பாட்டில் இருப்பான். ஆடுகளம் படத்தில் நடிக்க வெற்றிமாறன் என்னை அணுகிய போது, நடிப்பு tஎனக்கு ஓஹ்து வருமா என சந்தேகத்தோடே கேட்டேன். வெற்றிமாறன் தான் நம்பிக்கையூட்டி என்னை நடிக்க வைத்தார். சினிமாவில் நடிப்பு என்பது கண் கட்டி வித்தை போன்றது. இயல்பான வெளிப்பாடுகளை விட கேமரா கோணங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தும் பாவனைகளே சிறந்த நடிப்பாகின்றது. ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபத்திரத்திற்கு உயிர் கொடுத்ததில் நடிகர் ராதாரவியின் குரலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் வேலைகளை இரண்டு நாட்களில் முடித்து விடுவார். அனால் இப்படத்திற்காக தனி கவனம் எடுத்து என் உடல் மொழிக்கு ஏற்ப குரலை மாற்றி, கிட்டதட்ட இரண்டு வாரங்கள் வரை டப்பிங் பேச எடுத்துக் கொண்டார். பேட்டைக்காரன் கதாபாத்திரத்திற்கு அவரது குரல் இன்னும் உயிர் சேர்த்தது.


தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் எதிர்மறையான கதாபத்தித்தில் நடித்தது உங்கள் வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை உண்டாக்கியதா?

இந்த படத்தில் இருந்து நடிப்பைக்க் கற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதுவும் இல்லை.


சினிமாவில் நடித்த பிறகு புலம் பெயர்ந்த தமிழர்களிடம் உங்களைப் பற்றிய அடையாளம் சார்ந்த பிம்பங்கள் என்ன?
நவீன இலக்கியத்தின் மீது இன்றைய இளைஞர்களிடம் நல்ல ஈடுபாடு உள்ளது.நவீன இலக்கியவாதியாக இருப்பது இளமையை வாழ்வதற்கு நிகராய் உள்ளது. பல இளம் படைப்பாளிகளுடன் நானும் ஓர் படைப்பாளியாய் இருப்பது ஓர் உத்வேகத்தை அளிக்கின்றது. நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகின்றது. வயது முதிர்ந்த தோழன், இளம் வயது தோழிக்கும் இடையே நிகழும் உரையாடல் போல நான் எழுதிய கவிதை ஒன்றில் இடம்பெறும் வரிகள்,
                    "தோழா உனக்கு எத்தனை வயசு?
                     தோழி எனக்கு 
                     சாகின்ற  வரைக்கும் வாழ்கின்ற வயசு..."

தமிழத்தில் உள்ள தமிழர்களிடம் உங்களைப்பற்றிய பிம்பம் என்ன?
படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கக்கூடிய நாடு தமிழ்நாடு. நல்ல கலைஞர்கலை மதிக்கும், எல்லை கடந்து நேசிக்கும் பண்புடைய ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சினிமாவில் நடித்தால் முதல்வனாகி விடலாம் என்பதெல்லாம் ரசிகர்களை கொச்சைப்படுத்தும் போக்கு. சங்க இலக்கியமான புறநானுற்றில், தன வீற்றிகு வந்த புலவரை உபசரித்து, தன மனைவியிடம் எனக்கு என்ன மரியாதை செய்கின்றாயோ அதையே இப்புலவனுக்கும் அளிக்க வேண்டும் என சொல்லும் தலைவனைப் பற்றிய பாடல் உள்ளது. இப்பாடலில் வரும் தலைவன் போல பெருந்தன்மை கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள். இதில் வரும் சங்க இலக்கியப் புலவனைப் போன்றவன் நான்.

இன்று கூட நான் மதுரைக்கு சென்றால் அங்கு உள்ளவர்கள் என்னை ஒரு உறவுக்கரானாகவே கருதுகின்றனர். நேசித்தலும், நேசிக்கப்படுவதைவிட வாழ்வை செழுமைப் படுத்தும் செல்வம் வேறு எதுவும் இல்லை.

( இவரது வலைப்பூவினை காண இங்கே சொடுக்கவும்...

1 கருத்து: