பக்கங்கள்

வியாழன், 15 மார்ச், 2012

ஊருக்கு செல்லும் வழி...

நீச்சல் அடிக்க கற்றுக் கொண்ட கிணறு
திருட்டுத் தனமாய் பறித்த மாமரம்
பிடித்து மீண்டும் பறக்கவிட்ட தும்பி
வாடகை சைக்கிளில் அடித்த குரங்கு பெடல்

ஏரிக்கரையோரம் உள்ள நாவல் மரம்
கால் உடைந்த அய்யானார் சிலை
ரயில் வண்டி விளையாடிய மாட்டுக்கொட்டகை
அக்காக்களோடு விறகு வெட்டச் சென்ற ஏரிக்கரை

மூடிக்கிடக்கும் டூரிங் டாக்கீஸ்
போஸ்டர் ஒட்டியிருந்த டீக்கடை
புளிய மர நிழலில் உள்ள சுமைதாங்கிக் கல்
பாதி அரவையிலேயே கரண்ட் போன ரைஸ்மில்லு


இவையெல்லாம் அழைக்கின்றன...
நான்கு நாட்கள்
விடுமுறைக்காக
காத்திருக்கின்றேன்...

1 கருத்து: