பெருந்திரள் நினைவுகளும் தமிழக விவசாயிகளும்
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
குறள் 1038
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
மக்களின் பெருந்திரள் புத்தி என்பது தனித்தனி மனிதர்களிடையே சிதறுண்டிருக்கின்ற கருத்துகளின் ஒருங்கமைவு ஆகும். அது நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்துகளின் மீதான நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்குகின்றது. மக்களின் நினைவுகள் என்பது இன்றைய சூழலில் நிறுவனமயமாக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. மக்களின் பெருந்திரள் நினைவுகளை ஊடகங்கள் நிரனயிக்கின்றன. ஊடகங்கள், தற்போது நாம் கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை வடிவமைக்கின்றன.(Forbes magazine, 7/16/2012).
சமுக பிரச்சனைகள் என்பது, உண்மையில் அது ஒரு சமுக பிரச்சனையாக கருதப்படுவதில்லை. ஒரு சமுகம், தற்போதைய சமுக பிரச்சனை இன்னதென்று புரிந்துகொள்ள ஒரு பொதுத்தளம் தேவைப்படுகின்றது. தொல் சமுகத்தில் கூட்டு ஒருங்கமைவு என்பது பஞ்சாயத்து என்ற வடிவில் இருந்தது. இது அரசியல் பங்களிப்பு, வியாபாரம், சமுக நீதி என்ற தளங்களில் இயங்கி வந்தது. இது சமுக நலத்திற்கும் ஜனநாயகத்தினை உறுதி படுத்தவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இன்றைய சூழலில் கூட்டு ஒருங்கமைவு என்பதை ஊடகங்கள் என்ற எதிர்மறையான வடிவில் உள்ளது. அரசியல் பங்களிப்பு, வியாபாரம், சமுக நீதி என்ற தளங்களில் ஊடகங்களும் இயங்குகின்றது. ஆனால் இது ஜனநாயகத்தினை சார்ந்து இயங்கவில்லை.
சமுக அசைவியக்கத்தில் உற்பத்தி என்பது அடிநாதமாக விளங்குகின்றது. உற்பத்தி மற்றும் உழைப்பாளர்கள் மீது அக்கறை கொள்ளாத ஒரு சமுகம் உருப்பட வழியில்லை. இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்ற கிராமங்கள் பற்றிய சமுக அக்கறை இன்றைய ஊடகங்களுக்கு பெரிதும் இல்லை. உலகுக்கு அன்னம் அளந்த கைகள் நியாய விலைக்கடைகளில் விலையில்லா பரிசுப்பொருட்கள் வாங்க வரிசையில் காத்துக் கிடக்கின்ற அவலம் தான் இங்கு உள்ளது. பருவமழை பொய்த்தது, பொருளாதார மாற்றம் ஆகியன விவசாயிகளின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயம் காவேரி நதிநீரை நம்பியே உள்ளது. காவேரி நதிநீர் பிரச்சனை என்பதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பிரச்சனையாக ஊடகங்கள் உருவகப்படுத்துகின்றன. இதனை சமுக பிரச்சனையாக கருதாமல் இரு மாநில அரசியல் பிரச்சனையாக சித்தரிக்கப் படுவது நல்ல
மாற்றங்களை ஏற்படுத்தாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக