தரமணியிலிருந்து
புறப்பட்ட
இந்த
பறக்கும் இரயில் இன்று
பட்டாம்பூச்சியாக
பறந்து
கொண்டிருக்கின்றது.
தேடிக்கொண்டிருக்கின்றேன்
எனக்குள்
இருக்கும் என்னை
என்
அன்பை
என்
காதலை
என்
நட்பை…!
அந்த
பட்டாப்பூச்சி
உண்மையிலேயே
பைத்தியக்காரத்தனமானது.
அங்கும்
இங்கும் பறந்து கொண்டே இருக்கின்றது.
இரயில்
பல நூற்றாண்டுகள் கடந்து
முன்னும்
பின்னும் சென்று கொண்டேயிருக்கின்றது.
இந்த
பிரபஞ்சம் கடந்தும்
தேடிக்கொண்டே
இருக்கிறேன்…
என்
தேடலில் ஒளிந்து கொண்டிருக்கின்றது
என்
இருத்தலும்
உன்
நினைவுகளும்.
பாரதி
ஆரோக்கியராஜ், 10.11.2016, தரமணியில்
இருந்து புறப்பட்ட இரயிலில்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக