நவம்பர் 8, 2016 அன்று இந்தியப் பிரதமர்
தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிடுகின்றார். இன்று நள்ளிரவு முதல் மக்களிடம்
புழக்கத்தில் இருக்கின்ற
500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது
என அறிவிக்கின்றார்.
மேலும்
இரண்டு நாட்கள் வங்கிகள்,
ஏ.டி.எம் மையங்கள் செயல்படாது
என அறிவிக்கின்றார்.
ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் மற்றும் கள்ள
நோட்டுகளுக்கு எதிரான இந்திய அரசு எடுத்திருக்கும் வரலாற்று நடவடிக்கை என அரசு விளம்பரம்
செய்து கொள்கின்றது.
இதற்கு அரசு அளித்திருக்கும் விளக்கம்:
·
இந்த
வரலாற்று நடவடிக்கை மூலம் ஏழை,
நடுத்தர, மேல் நடுத்தர வகுப்பினருக்கு
புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்.
·
ரியல்
எஸ்டேட் விலைவாசி,
உயர் கல்வி, மருத்துவம் இனி சாமானிய
மக்களையும் சென்றடையும்.
·
ஆயுத
கடத்துபவர்கள்,
உளவு பார்ப்பவர்கள், தீவிர வாதிகளுக்கு நிதி
உதவி அளிப்பது தடுக்கப்படும்.
·
மிகப்பெரிய
அளவிலான கள்ள நோட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்.
என அறிவித்திருக்கின்றது.
உண்மையில் இந்த அறிவிப்பு என்ன மாதிரியான விளைவுகளை
ஏற்படுத்தியுள்ளது.
அன்றாடம்
கூலி வேலை செய்யும் தொழிலாளர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் தான் பெரும் இன்னலுக்கு
உள்ளாக்கியிருக்கின்றது.
இன்னும்
சொல்லப்போனால் சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்படிருக்கும் பொருளாதார வன்முறை என்றே
சொல்ல வேண்டும்.
திருவள்ளுவர் தீதின்றி வந்தப் பொருள் செல்வம் தான்
அனைத்து இன்பத்தையும் அளிக்கும் என கூறுகின்றார். ஆனால் இன்று நாட்டின் பொருளாதரத்திற்கு
ஒரு அச்சுறுத்தலாக இருப்பது முறைகேடாக சேர்த்து வைத்துள்ள கருப்பு பணம் என இந்திய அரசால்
சொல்லப்பட்டு வருகின்றது.
சுவிஸ்
வங்கியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி
கணக்கிலும்
15 இலட்ச
ரூபாயை வங்கியில் செலுத்துவதாக வாக்குறுதி அறிவித்த இந்த அரசு இன்று செய்துள்ளது என்ன?
கருப்பு இழிவானது என்று கருதுவது அதிகாரத்திற்கும்
எளிய மக்களுக்கும் இடையே நிலவிவரும் முரண்பாடு என தொ.பரமசிவன் கூறுகின்றார். அவ்வகையில் கருப்பு பணம்
என்ற சொல்லாடல் முற்றிலும் சாதிய மேலாதிக்கம், இனவெறி சார்ந்த ஒன்று. ஆங்கிலத்தில் விளிக்கும் Black Money என்ற சொற்பதம் அங்கு
நிலவுகின்ற நிறவெறியின் வெளிப்பாடே அன்றி வேறொன்றும் இல்லை. முறைகேடாக சேர்த்த பணத்தினை
முறைகேடு என்று சொல்லாமல் கருப்பு பணம் என கூறுவது, இங்கு பொதுப்புத்தியில் இருக்கின்ற
சாதீய மனப்பான்மையையே காட்டுகின்றது. இந்த சொல்லாடல் இங்கு பல்லாண்டுகளாக ஆட்சி செய்து
கொண்டிருக்கும் சாதீய அதிகார மையங்கள் விளைவித்த ஒன்று. இது மக்களிடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளையும், அடிமை உணர்வையும் உருவாக்குபவையாக
இருக்கின்றன.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பதினால்
மட்டும் நாட்டில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய முடியுமா. இன்று நாட்டின் மிகப்பெரிய
அச்சுறுத்தலாக இருப்பது முறைகேடாக சேர்த்து இருக்கும் ’கருப்பு’பணம் மட்டும் தானா. அவ்வாறு முறைகேடாக சேர்த்த
பணம் வைத்திருக்கும் பெரு முதலாளிகள் இதனால் பாதிக்கப்படுவார்களா? என்றால் இல்லை என்றே
சொல்லலாம்.
இன்று அரசியல்
வாதிகள்,
அரசு அதிகாரிகள், பெரு வணிக நிறுவனங்கள்
தான் முறைகேடாக பணம் சேர்ப்பதில் முதன்மையாக உள்ளன. அவர்களுக்கு இந்த அறிவிப்பினால்
ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படப் போவதில்லை.
ஏனெனில் அவர்கள் அதை முன்பே சொத்தாகவும், வீடாகவும், நகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும்
மாற்றி விட்டனர்.
இதைவிட
பெரும் அபாயம் அரசுப் பொறுப்புகளில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பணி நியமனங்கள். முறைகேடாக பணிநியமனம்
செய்யப்பட்டவர்கள் எவ்வித அச்சுறுத்தலும் குற்ற உணர்வுமின்றி அன்றாடம் தங்கள் வேலையை
செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள்
மாதாமாதம் சம்பளத்தினை முறைகேடாக வாங்கி வருகின்றனர். இது கருப்பு பணமில்லையா? ஆனால் உழைக்கும் மக்கள்
ஐநூறையும்,
ஆயிரத்தையும்
மாற்றிக்கொள்ள வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக
இருக்கும் இத்தகைய பணி நியமனங்கள் செல்லாது என இவ்வாறு ஒரே இரவில் அறிவிக்க முடியுமா? பணம் செல்லாது என அறிவித்த
சில மணி நேரங்களிலேயே நகைக் கடைகளை மொய்க்க தொடங்கிய கூட்டத்திடம் இருக்கின்ற முறைகேடாக
சேர்க்கப்பட்ட பணங்களை இந்த அரசு எப்படி மீட்கும்.
போலியான கல்விச் சான்றிதழ்களும் முறைகேடானா பணிநியமனங்களும்
தான் இன்று பல இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்றன. ஆனால் அது குறித்தோ அது சார்ந்த
சாதிய படிநிலைகள் குறித்தோ வாய் திறக்காத அரசு புதிதாக வெளியிட உள்ள ரூபாய் தாளில்
சமஸ்கிருதத்தை திணித்து இருக்கின்றது.
பெரு நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன்களை தள்ளுபடி
செய்துவிட்டு விவசாய கடன்களையும் கல்விக்கடன்களையும் வசூலிக்கும் வேலையை அதே நிறுவனங்களுக்கு
அளித்திருப்பது துன்பியல் முரண்.
ஏழை நடுத்தர
மக்களின் உயர்கல்வி,
மருத்துவ
வசதிகளை உறுதிபடுத்தும் என அறிவித்து இருக்கும் இந்த அரசு புதிய கல்விக் கொள்கை என
அடுத்த தலைமுறையின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது. இன்று எந்த ஒரு எளிய
சாமானிய மனிதனாலும் அவ்வளவு எளிதாக அப்போலோ போன்ற மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை
பெற முடியாது.
இருக்கின்ற
அரசு மருத்துவமனைகளின் எதார்த்தம் முற்றிலும் வேறான ஒன்று. இதற்காக ஒரே இரவில் அனைத்து கல்வி
நிறுவனங்களும் மருத்துவமனைகளும் அரசே ஏற்று நடத்தும். அதற்கு உரிய இழப்பீட்டினை ஐம்பது
நாட்களுக்குள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை இந்த அரசு இப்படி ஒரே இரவில் அறிவித்து
செயல் படுத்த முடியுமா?
அரசின் ஆதிக்கமும் அடக்கு முறையும் என்பது எளிய மக்களின்
மீதே ஒழிய பெரு முதாலாளிகளிடமோ பார்ப்பனர்களிடமோ இல்லை. ஏனெனில் இன்று நிகழ்த்தப்பட்டிருப்பது
எளிய மக்களின் மீதான கருத்தியல்,
பொருளாதார
வன்முறை.
இதில் எந்த
நியாயங்களையும் காண முடியாது.
அ.ஆரோக்கியராஜ்
முனைவர்
பட்ட ஆய்வாளர், இதழியல்
மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப்
பல்கலைக் கழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக