பக்கங்கள்

புதன், 14 டிசம்பர், 2011

சில்லறை இல்லைங்க...

அமெரிக்காவில் வால்மார்ட் வருகையால் சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என 2008 ஆம் ஆண்டு அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு கூறுகின்றது.
walmart


அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி (Iowa state university), ‘கிராமப்புற சமுதாயத்தின் மீது வால்மார்ட் வர்த்தகம் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தலைப்பில் ஆய்வை நடத்தியுள்ளது.


வால் மார்ட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த தொடங்கிய முதல் ஆண்டிலேயே அமெரிக்காவின் 34 நகரங்களில் 2 விழுக்காடு விற்பனை சரிவு மற்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் 47 விழுக்காடு சில்லறை விற்பனை வர்த்தகத்தை வால்மார்ட் கபளீகரம் செய்தது. சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு சரிபாதி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சாதாரண சில்லறை விற்பனை நிறுவனங்கள் என்பது சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளை விடப் பன்மடங்கு பெரியவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


வால்மார்ட் வருகையால் இதர சில்லறை விற்பனை நிறுவனங்களின் வியாபாரம் சரிபாதியாக குறைந்தது மட்டுமின்றி சில்லறை விற்பனைத் துறையில் வேலைவாய்ப்பையும் பாதித்தாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது. சில்லறை விற்பனை அங்காடிகளில் வேலை செய்தவர்களின் வருமானம் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலரில் தொடங்கி 1.4 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,50,000 பேர் இதனால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.


இந்திய நாட்டின் சில்லறை வர்த்தகம் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு திறந்துவிடப்பட்டால், அதில் வால்மார்ட் மட்டும் நுழையப்போவதில்லை. அதைவிட பலம் பொருந்திய நெதர்லாந்து நாட்டின் அஹோல்ட் (Ahold), பிரான்ஸ் நாட்டின் கேரிஃபோர் (Carrefour) ஜெர்மன் தேசத்தின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ போன்ற நிறுவனகளும் சேர்ந்தே வரப்போகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ் போன்ற இந்தியப் பெருநிறுவனங்களால் சில்லறை விற்பனை வியாபாரிகள் தள்ளாட்டத்தில் உள்ளார்கள். இந்நிலையில், ரிலையன்ஸையே மிரட்டும் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்ள் சில்லறை வர்த்தகத்தைத் தொடங்கினால் சிறு வியாபாரிகள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டியது தான்.


நான்கு கோடி பேருக்கு வாழ்வளிக்கும் சில்லறை வர்த்தகம், இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 முதல் 11 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இதில் 97 விழுக்காடு முறை சாரா வர்த்தகம். இவர்கள் காலங்காலமாக சில்லறை வர்த்தகம் செய்து வருபவர்கள். இவர்களில் கைவினைஞர்களும் அடக்கம்.


அந்நிய நேரடி மூலதனத்தால் விலைவாசி (பணவீக்கம்) குறையும் என்ற கூற்றும் உண்மை அல்ல. உள்ளூர் சந்தையில் உள்ள சில்லறை விற்பனைப் போட்டியே விலையைக் குறைக்கக் காரணமாக உள்ளது. ஒரே ஒரு விற்பனையாளன் என்ற நிலையில் விலை நிலவரம் மிக மிக அதிகபட்சமாகவே இருக்கும். இன்று இருப்பதைவிட பன்மடங்கு விலைவாசி உயர்வு ஏற்படும் என்பதே உண்மை.


வேளாண்மைத் துறையில் இடைத் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று கூறுவது வெறும் ஒப்பனையே. அந்நிய கம்பெனிகள் விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல் செய்யும் என்பது உண்மைதான் என்றாலும் இடைத்தரகர்களின் பங்கையும் அந்நியக் கம்பெனிகளே எடுத்துக் கொள்ளும் என்பதை கவனிக்கவேண்டும். விவசாயிகளுக்குத் தற்போது கிடைத்து வரும் வருவாயை விட குறைவாகவே கிடைக்கும். காரணம், ஒரு சில மிகப்பெரும் நிறுவனங்களே சந்தையில் இருப்பார்கள். விவசாயிகளிடம் ஒப்பந்த வாணிபம்கூட செய்வார்கள். விவசாய விளைபொருள்களுக்கு, விவசாயிகள் கோரும் விலை கிடைக்காது. பன்னாட்டு கம்பெனிகள் மட்டுமே பொருள்களை வாங்கும் என்பதால், அவர்கள் சொல்லும் விலைக்கு விற்காவிட்டால், விற்பனைக்கு வேறு வழி இல்லை. வாங்க வேறு ஆள் இல்லை என்ற நிலை வந்தால், அடி மாட்டு விலைதானே!


அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் வேளாண் விளைபொருள்கள் வீணாவது தவிர்க்கப்படும் என்று கூற்றில் மட்டும் உண்மை உண்டு. ஆனால் அதனால் நமது விவசாயிகளுக்கு லாபம் இல்லை. இந்த உபரியின் பெரும் பங்கு பன்னாட்டு கம்பனிகளுக்கே செல்லும். நம் நாட்டில் உள்ள பல கூட்டுறவு வேளாண்மை அங்காடிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.


இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரும் போது ஆண்டுக்கு அறுபது லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவர் என மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா கூறுகின்றார். ஆனால் அந்நிய முதலீட்டால் உடனடியாக இரண்டரை கோடி பேர் வேலை வாய்ப்பினை இழப்பர். 


நம்மூரில் எட்டாவது பத்தாவது பெயில் ஆனா மளிகைக்கடையில் வேலைக்கு சேர்த்து விடுவர். அந்த பையன் ஒரு ஐந்து ஆண்டுகளில் தனியாக ஒரு சிறு கடையை அவன் தெருவில் தொடங்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவான். ஆனால் வால் மார்ட் போன்ற நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்து முதுகு வளைந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை. அவனால் அதன் பிறகு எந்த வளர்ச்சியையும் தன்  வாழ்க்கையில் காண இயலாது.


இன்று தெருவோரக் கடைகளில் கூட தலையாட்டி பொம்மையோ, மரப்பாச்சி பொம்மையோ காணமுடிவதில்லை. எல்லாம் பொசு பொசு கரடி பொம்மையும் நாய் பொம்மையும் தான்.


கிராமங்களில் துண்டு போட்டு மூடி விரல்களில் விலை பேசிய வியாபாரிகள், இன்று அந்த துண்டை தலையில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு உள்ளது நமது இந்திய பொருளாதாரம்.


Iowa state university யின் ஆய்வு : 
http://www2.econ.iastate.edu/faculty/stone/10yrstudy.படப் 
http://ageconsearch.umn.edu/bitstream/17713/1/ar970189.படப்
கட்டுரைக்கு உதவிய தளம்:
http://www.tamilpaper.net/?p=4999

வெள்ளி, 9 டிசம்பர், 2011

புதன், 7 டிசம்பர், 2011

கடவுள் மறந்த மொழி


surrealism


வன்மத்தின் எச்சங்களும்
காமத்தின் மிச்சங்களும்
பின்னிரவில்
உமிழப்படுகின்றன
கனவுகளாக...


உறக்கம் கொண்ட
பின் யாமப் பொழுதுகளில்
விழித்துக்கொண்டிருக்கின்றது
உள்மனம்...

கடவுள் மறந்த மொழி
யாராலும் பேச முடியாத மொழி
எல்லோரும் உணரும்
ஒரு உன்னத மொழி
கனவு...

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அப்புறம் மழையும் பெய்தது...

தட்டான்கள் பறக்கும் மாலைப்பொழுதில்
தேநீர் கடைக்கு நடந்து செல்கையில்
முகத்தில் அறைகின்றது ஆடிக்காற்று
தேநீர் கடையில் நான் கேட்டிருந்த
எனக்கான கோப்பை தேநீர் என் கைகளில்...
காத்துக் கொண்டிருக்கின்றேன் அவளுக்காக...
பேருந்தில் ஏறிச் சென்றால் அவள்
சிறு புன்னகையுடன்...
எனது தேநீர் கோப்பையில் மேகங்கள் மிதக்கின்றன...
அப்புறம் மழையும் பெய்தது...

புதன், 30 நவம்பர், 2011

கூதிர் காலம்

இந்த கூதிர் கால மழை அழகானது...
மகிழ்ச்சி, துக்கம், கோபம் என ஒரு சேர
எல்லாவற்றையும் குறைக்கின்றது.

இந்த கூதிர் கால பயணம் இனிமையானது...
அன்பு, பிரிவு, தவறுகள் ஆகியவற்றை மறந்துபோக
நினைவு கொள்ளச் செய்கின்றது.

இந்த கூதிர் கால தேநீர் இதமானது...
கடன், புத்துணர்வு, அரட்டை என களிப்படைய
நண்பர்களைக் கொடுக்கின்றது.

வியாழன், 24 நவம்பர், 2011

திரை மொழி

பொதுவாக, இந்திய புராணங்களை வாசகன், வாசிக்கும் போது அவனுக்கு முக்கிய கதா பாத்திரங்களாக தலைவன், தலைவி மற்றும் எதிரி தேவைப்படுகின்றான்.
பொதுவாக கதை சொல்லலில் மூன்று படிநிலைகள் உள்ளன.
  • சமநிலை
  • பிரச்சினைக்கு உள்ளாக்குதல்
  • மீண்டும் சமநிலை
Hollywood திரைப்பட படைப்பாளிகள் 1940 வரை இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தி வந்தனர்.
திரைப்படங்களை பெரும்பாலும் நாடக அரங்குகளிலேயே தயாரித்தனர்.
Henry ford என்பவர் சினிமாவினை சந்தைபடுத்தும் முறையை பெரிது படுத்த விரும்பினார். ஒரு அரங்கில் பத்து விதமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கும் விதத்தில் வடிவமைத்தனர்.
அந்த காலங்களில் Hollywood இன் ஐந்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்
  1. MGM
  2. UNIVERSAL
  3. 20th century FOX
  4. WARNER BROTHERS
  5. PARAMOUNT
1902 ஆம் ஆண்டு முதல் கதை சொல்லும் உத்திகளை கற்று வந்தவர்கள், 1930க்கு  பிறகு திரைப்படங்களை வியாபாரத்தை விரிவுபடுத்த புதுப்புது உத்திகளை கையாளத்துவங்கினர்.
Edwin S. Porter:
1902 ஆம் ஆண்டுகளில் அரங்குகளில் மட்டுமே படம்பிடிக்கப்பட்ட சினிமாவினை இயற்கை சூழலில் பொது இடங்களில் படம் பிடிக்க ஆரம்பித்தார். கதை சொல்லலில் படத்தொகுப்பு(Editing) உத்தியினை அறிமுகப்படுத்தினார். இவரது Great Train Robbery திரைப்படம் கேமரா அசைவுகளுக்கு (Camera Movements) முன்னோடியாக விளங்குகின்றது.
Georges Melies:
தந்திர கலை நிபுணரான இவர் தனது திரைப்படங்களில் தந்திர காட்சியினை(Special Effects) பயன் படுத்தினார். திரைப்படத்தை ஒரு சிறந்த Magic Show ஆக மாற்ற சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்.
Classical Hollywood Film Making:
மக்களுக்கு நன்கு அறிந்த ஒரு நடிகரோ நடிகையோ தான் கதையின் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
Hero, Heroine என்ற நட்சத்திர அந்தஸ்து இல்லாமலும் படம் எடுக்க இயலும் என ரச்யத்திரைப்படங்கள் நிரூபித்தன. Sergei M. Eisenstein இன் Battleship Potemkin திரைப்படம் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
Eisenstein திரைப்பட தொகுப்பிற்கு புது உத்தியை அறிமுகப்படுத்தினார். இதன்படி, திரைப்படத்தில் இரு வெவ்வேறான காட்சிகளை இணைக்கும் போது அது மூன்றாவது பொருளை கொடுக்க வேண்டும்.
எகிப்திய மொழி வடிவமான Hieroglyphic, ஐ திரைப்படத்தொகுப்பில் பயன்படுத்திக் காட்டினார்.
இதன் மூலம் திரைப்படங்களில் Montage எனும் படத்தொகுப்பு உத்தியினை அறிமுகப்படுத்தினார்.
  • Intellectual Montage
  • Metric Montage
இதற்கு முன்பு வரை Hollywood இல் Classic Film Editing Theory என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன்படி திரைப்படம் செயற்கையானது என்பது பார்வையாளனுக்கு தெரியாத வகையில் படத்தொகுப்பு (Continuity Film Editing) செய்து வந்தனர்.
Eisenstein இன் கூற்றுப்படி ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தவறு. ஒன்றும் ஒன்றும் மூன்றாகும்.
mise - en - scene:
காமராவால் படம் பிடிக்கப்படும் போது காமேரவிற்கு முன்னாள் திரையில் என்ன தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிப்பது.
இது இரு நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது.
  1. நாட்டில் உள்ள கலாச்சாரம் (Law of Country)
  2. நாட்டில் உள்ள சட்ட முறைகள் (Culture of Country)

புதன், 9 நவம்பர், 2011

அச்சுறுத்தும் அதிர்வுகள் - The Shining

சிறு வண்டு போல ஒரு மஞ்சள் நிற கார், வளைவுகள் நிறைந்த மலைகளுக்கு ஊடே செல்கின்றது. பின்னணியில் அச்ச உணர்வை தூண்டும் வகையில் பின்னணி இசை. அந்த காரில் செல்பவர்களுக்கு ஏதோ நிகழப் போகின்றது என்ற அச்ச உணர்வை படம் பார்பவர்கள் அனைவருக்கும் ஏற்படுத்துகின்றது "The Shinning" திரைப்படம்.

Horror வகை நாவல்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான அமெரிக்காவைச் சார்ந்த Stephen king இன் நாவலைத் தழுவி Stanley Kubrick இயக்கிய திரைப்படம் The Shining. இத்திரைப்படம் எதார்த்தத்திற்கு மீறிய புனைவுக்கதைகள் (மிகைஎதார்த்தம்) வகையைச் சார்ந்தது.

இத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சி, ஏராளமான வளைவுகள் நிறைந்த மலைகளின் ஊடே ஒரு கார், ஒரு தங்கும் விடுதியை நோக்கி செல்லுகின்றது. இக்காட்சிகள் பறவைக் கோணத்தில்(Aerial photography) படம் பிடிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் போது இடம்பெறும் பின்னணி இசையானது, ஏதோ பதட்டமான நிகழ்வு நடைபெற உள்ளதை (fore shadowing technique) முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் உள்ளது.

இத்திரைப் படத்திற்கென பிரத்யேகமாக steady cam வடிவமைக்கப்பட்டது. Stanley Kubrick இதற்கு முன்பு தனது A Clock work Orange திரைப்படத்திற்காககுறைந்த f எண் கொண்ட(f 1/1.21) ஆடியை (லென்ஸ்) வடிவமைத்து பயன்படுத்தினார்.

The Shining திரைப்படம் திகில் படங்களில் தனி முத்திரை பெற்றுள்ளது. வழக்கமான திகில் படங்களில் இருந்து காட்சியமைப்பில் வேறு பட்டு இருந்ததே இதற்கு காரணம்.

தமிழில் வெளிவந்த "சுப்ரமணியபுரம்" திரைப்படமும், இத்திரைப்படத்தின் தொடக்கக்காட்சி ஏற்படுத்தும் உணர்வைப் போன்று ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் தொடக்கக்காட்சி, மதுரை நகரின் இரவுப் பொழுதினை படம் பிடித்தவாறு கேமரா அலைந்து கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல பின்னணி இசையும் உள்ளது.

திங்கள், 24 அக்டோபர், 2011

கனவு நிலை உரைத்தல்

கனவுக்குறிப்புகள்
அக்டோபர், 20,2011
கனவின் தொடக்கத்தில் இரண்டு ஓவியங்கள்

கனவுக்குறிப்புகள்


அரண்மனையின் முகப்பில் இருந்து போருக்கு தயாராக செல்லும் குதிரைப்படை,
கவிதை போன்று எது ஓவியம் வரையப்பட்ட ஒரு சுவரின் ஓவியம், சுவரின் இடது ஓரம் ஒரு சைக்கிள்...

இவ்வாறாக கனவு தொடங்குகின்றது.

கிராமத்தில் இருந்து காட்டுக்கு செல்லும் வழியில் நான் சென்று கொண்டு இருக்கின்றேன். நான் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு நாய் என்னை துரத்த ஆரம்பிக்கின்றது. நான் ஓடிக்கொண்டிருக்கும் பாதையின் இடது புறம் பெரிய பள்ளம், வலது புறம் ஒரு பூந்தோட்டம். அந்த பூந்தோட்டம் வேலி போடப்பட்டிருக்கின்றது. நாய்க்கு பயந்து நான் வேலியைத் தாண்டி பூந்தோட்டத்திற்கு உள்ளே செல்கின்றேன். தோட்டத்திற்கு மற்றொரு வழியாக ஒரு ஆடு மேய்க்கும் பெண் தலையில் சாப்பாடு கூடை சுமந்து கொண்டு வருகின்றாள். அவளுக்கு முன்னால் ஆடு வருகின்றது. நான் அந்த பூன்தொட்டத்திலேயே இருக்கின்றேன். ஆடும் நாயும் ஒன்றாக நிற்கின்றன. பூந்தோட்டத்தில் இருந்து நான் முன்பு வந்த பாதையில் வந்து நின்று கொண்டிருக்கின்றேன்...

திங்கள், 26 செப்டம்பர், 2011

கனவு வெள்ளைத்திரையில்...

சினிமா என்பதே கண் விழித்துக்கொண்டு காணும் கனவு

"கனவுகள் உள் மனத்துக்கான ராஜ வீதி" - பிராய்டு

சிக்மன்ட் பிராய்ட் கூற்றுப் படி, "கனவு என்பது ஆழ்மனதில் பதிந்துள்ள எண்ணங்களின் வெளிப்பாடாகும். ஒருவன் உறங்கும் போது, அவனது நினைவிலியின்
செயல்பாடே கனவாகும்."

பொதுவாக மனிதன் உறங்கும் போது இரு நிலைகளில் உறங்குகின்றான். விழி அசைவு நிலை(REM), விழி அசைவில்லா நிலை(NREM).

மனித மனம் என்பது முக்கால் பங்கு நீரில் மூழ்கிய பனிக்கட்டியை போன்றது.


பொதுவாக கனவு நான்கு வகைகளில் தான் வருகின்றது.
  1. அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வருகின்றது.
  2. ஒரு பிரச்னையை தீர்க்கும் வகையில் வருகின்றது.
  3. ஒரு விஷயத்தை முன்னறிவிக்கும் விதமாக வருவது.
  4. உளவியல் சார்ந்த குறியீட்டுகளை குறிப்பிடுவனாக வருவது.
பழங்குடியினர் கனவுகளை கடவுளின் வாக்காகவே கருதுகின்றனர். அவர்கள் வாழ்க்கையையும், கனவையும் ஒரே காலகட்டத்தில் நிகழும் இரண்டு வாழ்க்கையாகப் பார்க்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுடைய தினசரி வாழ்க்கையை விட புனிதமான ஒரு கனவு வாழ்க்கை நிகழ்கிறது. கனவு வாழ்க்கையின் நிகழ்வுகள் அவர்களுடைய சமூகத்தின் பல முக்கிய முடிவுகளை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு மதத்தினரும் கனவை ஒவ்வொரு விதமாக அணுகுகின்றனர்.
சினிமாவில் கனவுக்கட்சிகளுக்கென ஒரு இடம் உள்ளது. ஆனால் அது ஒவ்வொரு நாட்டு திரைப்படத்திற்கும் வேறு படுகின்றது. பொதுவாக தமிழ் திரைப்படங்களில் கனவுக்காட்சிகள் பாடல் காட்சிகளாகவே இடம் பெறுகின்றன. விதி விலக்காக சிவாஜி கணேசன் நடித்த "முதல் தேதி" திரைப்படம் உள்ளது. இப்படம் முழுக்க கனவாகவே உள்ளது. மற்றப்படி அரண்மனையிலும் அயல் நாட்டிலும் டூயட் பட்டு படுவதாகவே அமைகின்றது.

மன நோய்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கனவுகளை புரிந்து கொள்ளுங்கள்.

பிற மொழித் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் பயன்படுத்துவது குறைவு என்பதால் அவர்கள் சற்று வேறு விதமாக கையாளுகின்றனர். அப்படி கனவினை மையமாகக் கொண்டு வெளி வந்த திரைப்படங்களில் இங்க்மர் பெர்க்மனின் wild strawberries திரைப்படமும், அகிரா குரோசவாவின் "dreams" ம் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.
wild strawberries திரைப்படம் பேராசிரியர் borg இன் கடந்த காலம் குறித்த மதிப்பீடுகள், மற்றும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, முக்கியமான மாற்றங்களை பற்றியது.

திரைப்படத்தில் பேராசிரியர் borg அவர்கள் அவரது வாழ்நாள் சாதனைக்கான விருதினை பெறுவதற்காக வேறு ஒரு நகரத்துக்கு செல்கிறார். அதற்கு முன் அவருக்கு வரும் கனவுகளே இத்திரைப்படம்.
பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கையில் தனது குடும்ப புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கையைக் காட்டிலும் சமூகத்தில் சிறந்த மனிதராகவே பேராசிரியர் borg இருந்துள்ளார். இப்படத்தில் கனவுகள் ஆழமான உண்மைகளை சுட்டி கட்டும் ஒரு சாதனமாக இருந்துள்ளது. குதிரை வண்டி, சாலையில் கடந்து செல்லும் போலிஸ், சக்கரம் தனியாக கழன்று உருண்டு ஊடுதல், தன்னுடைய பிணத்தை காணுதல், கல்லூரியில் மீண்டும் சென்று தேர்வு எழுதுவது போன்றவை எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஆனால் முக்கியமான விஷயத்தை கூறுகின்றது.

படத்தின் முதல் கனவு, யாருமற்ற வீதிகளில் பேராசிரியர் நடந்து செல்கிறார். அப்பொழுது ஒரு குதிரை வண்டி வருகிறது. இவர் அருகில் செல்லும் போது சக்கரம் கழன்று தனியாக உருண்டோடுகின்றது. வண்டியில் இருந்து ஒரு சவப்பெட்டி உருண்டு விழுகின்றது. அதில் உள்ளே இருப்பது பேராசிரியர். பேராசிரியர் அதிர்ச்சியில் விழிக்கிறார். இவ்வாறாக கனவு முடிகின்றது.

மற்றொரு கனவு பேராசிரியர் தான் படித்த கல்லூரியில் தேர்வு எழுதுவது போல கனவு காண்கிறார்.
இப்படத்தில் வரும் கனவுகளின் மூலம் பேராசிரியர் borg தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றார். அதே சமயம் அவர் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார். அந்த பரிசினை வாங்க தன்னை முழுமையாக தயார் படுத்திக்கொள்கின்றார்

ஜப்பானிய கனவு:


அகிரா குரோசவாவின் "dreams" திரைப்படம் முழுக்க முழுக்க கனவுகளையே மையமாகக் கொண்டு வந்த திரைப்படம். இத்திரைப்படம் எட்டு கனவுகளின் தொகுப்பாகும். கனவுகளுக்கே உரிய தொடர்சியின்மையும், விசித்திரமும், அபத்தமும் கலந்து எட்டு தனித்தனி கதைகளாக இருந்தாலும் ஒரு பிணைப்பு இருக்கும்.
இத்திரைப்படத்தில் வரும் முதல் கனவு, "sun shine in the rain" சிறுவன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது மழை பெய்யத் தொடங்குகின்றது. அதே வேளையில் வெயிலும் அடிக்கின்றது. அவனது அம்மா வெளியே காய வைத்திருந்த பொருட்களை எடுத்து வீட்டின் உள்ளே வைத்துக்கொண்டிருக்கிறார். இவனை எதுவும் சொல்லவில்லை. "இன்று வெயிலும் மழையும் சேர்ந்து அடிக்கின்றது. அதனால் காட்டில் நரிகளுக்கு கல்யாணம் நடக்கும். யாரவது பார்த்தால் அவர்களை கொன்றுவிடும். அதனால காட்டுக்கு விளையாடப் போகாதே அதை யாரவது பார்த்தால் அவர்களை கொன்று விடும்" என சொல்லுகின்றார். ஆனால் அந்த பையன் காட்டிற்கு சென்று நரியின் கல்யாணத்தை பார்க்கின்றான். திரும்ப வீட்டிற்கு வருகின்றான். அவனுடைய அம்மா அவனை திட்டுகின்றாள். வானவில் தோன்றும் இடத்தில் நரிகள் இருக்கும், அவையிடம் சென்று மன்னிப்பு கேட்டு வா... இல்லையென்றால் அவை உன்னை கொன்று விடும் என்று கதவை அடைத்து விடுகிறாள். அந்த சிறுவன் அழுது கொண்டே நரியினை தேடி புறப்படுகின்றான். இத்துடன் கனவு முடிகின்றது.

இந்த படத்தில் இடம் பெரும் கனவுகள் எல்லாம் குரோசாவா கண்ட கனவுகளின் தொகுப்பாகும்.
இந்த கனவில் சில முரண்பாடான காட்சிகள் தோன்றுகின்றன. முதலில் இல்லாத கதவு, நரிகளின் உருவம் ஆகியன.

செவ்வாய், 24 மே, 2011

ஆழ் மனதினை தேடி பயணிக்கும் புகைப்படங்கள்

நியூயோர்க்கை தளமாக கொண்ட புகைப்படகாரர் எரின் முல்வெஹில் (Erin Mulvehill)இன் 'Underwater' எனும் தொணியில் வெளியிட்ட புதிய புகைப்பட தொகுப்பு இவை.

"தினந்தோறும் உங்களை அறியாமலேயே காதுக்குள் கேட்கும் சில நுண்ணிய ஒலிகளுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு என்பதை கண்டுபிடிக்க பாடுபடுகிறேன்" என்று கூறும் இவர் தனது புகைபடங்களில் சிந்தனை, உடல், நேரம் இவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்குவதற்கு கடும் முயற்சி செய்கிறார்.

'இந்த புகைப்படங்கள் நீருக்கு அடியிலிருந்து தென்படும் அழகிய பெண்களது' என நீங்கள் நினைக்கலாம்.

உணர்வுகளை வெளிக்காட்ட பயன்படுத்திய ஊடகம் மட்டுமே இவை! நிஜமாக இதில் அழகானது, அப்பெண்களின் நுண்ணிய உணர்வுகளே என்கிறார் Erin. பௌத்தமத கோட்பாடுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம்!

"ஆழ்மன எண்னங்களுக்கும், எமக்குமிடையிலான தொடர்பை தேடும் தனது முயற்சி தொடரும்" என்கிறார்.

For Link Click here