கலை என்பது பொய்த் தன்மைக் கொண்டது. ஆனால் அவை உண்மையை உணரத் தூண்டுபவையாக இருக்கும். - பாப்லோ பிக்காசோ
War Pieta |
(Max Ginsburg - பிரான்ஸ் நாட்டு ஓவியர்.)
Foreclosure |
Torture Abu Ghraib |
ஒருநாட்டு மக்களின் மீது போர் தொடுக்கும் போது ஒரு அரசு முதலில் அந்த நாட்டின் செல்வங்களை கைப்பற்ற முயல்கின்றது. பிறகு அந்த நாட்டு வளமையை அழிக்க முற்படுகின்றது. இயற்கை வளம் மற்றும் மனித வளத்தை அழிப்பதை செய்கின்றனர். ஒரு நாட்டு மக்களின் மீது அதிகாரத்தை செலுத்த அவர்களின் பண்பாட்டின் மீதும் அங்குள்ள பெண்களின் மீதும் வன்முறை செலுத்துகின்றது. ஆதிக்கத்தை அடுத்த தலைமுறை வரை நீடிக்க இனப்பெருக்கத்தை சிதைக்க முற்படுகின்றனர். எல்லா நாட்டு இராணுவமும் போரில் ஈடுபடும் போது பெண்களின் மீது வல்லுறவு கொள்வது இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக ஆண் வாரிசுகள் கொல்லப்படுவதும், பெண் பிள்ளைகளை எதிரி நாட்டினர் மணந்து கொள்வதும் நிகழ்ந்து வருகின்றது. அரசின் குரோத உணர்வுகள் மற்றொரு நாட்டின் செல்வம், பண்பாடு, மற்றும் இனவிருத்தி ஆகியவற்றை அழிக்க முற்படுகின்றது.
The Third of May 1808 |
23, July, 1983 |
போரின் நவீனத்துவம்:
ஒரு அரசுக்கு ஆயுதமாக இருப்பது வெறும் துப்பாக்கிகள் மட்டுமன்று. ஒரு நாட்டு மக்களை ஒடுக்க அந்த மக்களை கருத்தியல் ரீதியாக அடிமைப்படுத்தி வருகின்றது. அவ்வகையில் கலை என்பவை ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. சமூக புரட்சியாளர்கள் சமூக விடுதலையை கலையின் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். இன்றைய சூழலில் கலை என்பது ஒரு முனை மழுங்கிய ஒரு ஆயுதமாக புரட்சியாளர்களின் கைகளில் உள்ளதாக காண முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக