பக்கங்கள்

புதன், 12 டிசம்பர், 2012

God is a Medium, Media is a Devil

கடவுள் ஒரு ஊடகம், ஊடகம் ஒரு சாத்தான்...
        தொன்மைச் சமுகத்தில், மக்களின் உற்பத்தி, உழைப்பு, வியாபாரம், பொழுதுபோக்கு, கலை ஆகியனவற்றை சமூகத்தோடு ஒருங்கிணைக்கும் ஒரு ஊடகமாகவே வழிபாடு என்ற அர்த்தத்தில் கடவுள் என்ற உருவகம் உருவகப்படுத்தபட்டிருக்கின்றது. நாற்று நடுவது முதல் தொடங்கி அறுவடை செய்து அதை சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்வதில் இருந்து கோயில் திருவிழா, கலை நிகழ்சிகள், விளையாட்டு என இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைக்க இனக்குழு மரபில் ஒரு கடவுளை மனிதன் உருவாக்கினான். அந்த கடவுள் சமுக அசைவியக்கங்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தார். அந்த கடவுள் மனிதனை தன் வழியில் சுயமாக கட்டிப்போட்டு நடக்கவிட்டார். 
        சந்தை என்ற ஒன்றும், கரகாட்டம் போன்ற கலைநிகழ்வுகளும் சங்கமிக்கின்ற ஒரு இடமாக கிராமங்களில் கோயில் இருந்தது. சந்தை படுத்துதலிலும், கலை என்பதிலும் மக்களின் எண்ணங்களே கடவுளாக பிரதிபலித்தது. 

        உற்பத்தி சாதனங்களை கொண்ட ஒரு வர்க்கம், தனது கருத்தியலை உழைக்கும் வர்க்கத்தின் மீது மனதளவில் கட்டுப்படுத்த பயன்படும் கருத்தியல் உற்பத்தி சாதனம் தான் ஊடகம். 
The class which has the means of material production at its disposal has control at the same time over the means of mental production, so that thereby, generally speaking, the ideas of those who lack the means of mental production are subject to it. (Marx & Engels: The German Ideology, cited in Curran et al. 1982: 22)
Marshall McLuhan ஊடகம் என்பதை ஒரு பரந்துபட்ட ஒரு பார்வையில் பார்க்கின்றார். "ஊடகம் என்பது செய்தி " என இவர் கூறுகின்றார். ஊடகம் தன் மீது திணிக்கப்படும் கருத்துகளின் மூலம் அது சமுகத்தின் மீது எதிர் வினையாற்றுகின்றது என இவர் கூறுகின்றார்.
சமுக இயக்கத்தில், உற்பத்தி முறைக்கும், வெகுஜன உளவியலுக்கும் உள்ள மிகச் சிக்க
Robert Waterman McChesney என்ற தொடர்பியல் பேராசிரியர், குடியாட்சிக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கும் இடையே ஊடகங்களின் பங்களிப்பை இவர் விரிவாக வலியுறுத்துகின்றார். சமுதாய வானொலிகளும் சுய உதவி குழுக்களும் சமுதாய மாற்றத்திற்கு பங்கு வகிக்கின்றன என்பது இவர் கருத்து.லான தொடர்பை பற்றிய புரிதல் தான் ஊடகம் என Raymond Williams கூறுகின்றார். 

வெகுஜன ஊடகம் எனும் பூதம் : 
    ஆதிக்க வர்க்கம், கடவுளின் வேலையை ஊடகங்களுக்கு மாற்றிக் கொடுத்தது. கடவுளின் வேலையை ஊடகம் கையில் எடுத்துக் கொண்டது. இன்று ஒரு பொருள் உற்பத்தி, விளம்பரம், வியாபாரம் என சந்தை மயமாக்கல் தொடங்கி திரைப்படங்கள், இணையம் என எல்லாவற்றையும் ஊடகம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. இன்றைய தலைமுறையின் பொழுதுபோக்கு, விளையாட்டு என எல்லாம் ஊடகம் எனும் சாத்தான் வசம் மாறிப் போனது. இதன் பின்னால் உள்ள வர்க்க அரசியலின் சந்தைமயமாக்கல் என்ற பெரும்பூதம் உள்ளதை புரிந்து கொள்வது அவசியமாகின்றது.


References : 
Marx, Karl and Frederick Engels. "The German Ideology." Ed. C. J. Arthur. New York: International Publishers, 1973.
McLuhan, Marshall. Understanding Media: The Extensions of Man. Cambridge: MIT Press, 1994.
Williams, Raymond. Marxism and Literature. Oxford: Oxford UP, 1977.


சனி, 9 ஜூன், 2012

நரிகள், ஊடகங்கள், ஆடுகள்

             கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று சேர்ந்தாலே விளையாட்டு கலைகட்டிடும். சிறுவர்கள் இவ்வாறு குழுவாக சேர்ந்து விளையாடும் போது குழு உணர்வையும், சமுகத்தில் அவர்களது பங்களிப்பையும் உணர்ந்து கொள்கின்றனர்.
             இவ்வாறு விளையாடப்படுகின்ற குழு விளையாட்டின் மூலமாக முன்னோர்கள் தன் இனத்தின் வரலாற்றினை சிறுவர்களுக்கு கற்று கொடுத்து வந்தனர். இன்றைய சூழலில் நாட்டார் விளையாட்டுகள் குறைந்து வந்ததன் விளைவாகவே இன்று சிறுவர்கள் இளம் வயதிலேயே தங்கள் கடமைகளை தவறியர்வர்களாக(Juvenile delinquent) வளர்கின்றனர்.

"சமூகம் தன் மீது கவியும் கருத்தியலை தான் விளையாட்டாக வெளிப்படுத்துகின்றது." - தொ. பரமசிவன்
              பத்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டைத் தொடங்குகின்றனர். சாட், பூட், த்ரீ போட்டோ அல்லது அவர்களாகவே விருப்பப்பட்டு குழுவாக பிரிந்து இருவர் மட்டும் இறுதியில் தனிமைப் படுத்தப் படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆடாகவும் மற்றொருவர் நரியாகவும் இருப்பார். மற்ற சிறுவர்கள் எல்லாம் சங்கிலி போல கை கோர்த்து வட்டமாக நிற்பர். ஆடாக இருப்பவரை வட்டத்திற்குள் நிற்க வைத்து அவரை நரியிடம் இருந்து காப்பாற்றுவர். இவ்விளையாட்டு விளையாடப்படும் போது இவ்வாறு பாடல் படுகின்றனர்.
"கண்டீகளா!! கண்டீகளா!!!
ஆட்டுக் குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்.. கண்டோம்...
ஆட்டுக் குட்டிய கண்டோம்...
எங்க...?
வீட்டுக்குள்ள...
வரலாமா!!?
வரக்கூடாது..."
இவ்வாறாகவும்,
"சங்கிலி புங்கிலி கதவத் தொற
நான் மாட்டேன் வேங்கைப்புலி
ஆட்டு குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்...
எங்க!!?
கொல்லையில...
வரலாமா!!?
ம்ஹும்..."

             சில கிராமங்களில் "ஆடு நரி ஆட்டம்" என்றும் சில கிராமங்களில் "எலி பூனை ஆட்டம்" என்றும் சில கிராமங்களில் "ஆடு புலி ஆட்டம்" என்றும் இவ்விளையாட்டு அழைக்கப் படுகின்றது.
             கால்நடை வளர்ப்பு சமூகத்தில் இருந்து வந்த மக்கள், காட்டில் ஆட்டுக் கிடை போட்டிருக்கும் போது நரியோ புலியோ வந்து வேட்டையாடி விடாமல் இருந்து காவல் காத்து வந்ததன் தொடர்ச்சியாக இவ்விளையாட்டு கிராமங்களில் இருந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது. தற்போது சில கிராமங்களில் மட்டும் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது.
            "வல்லோன் வகுத்ததே வாய்க்கால்" என்று இருக்கின்ற சமூகத்தில் அனைவரும் சமூக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வலியவரிடம் இருந்து எளியவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும், வலியவராக இருந்தாலும் சமுக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பவற்றையும் வலியவரின் நயவஞ்சக சூழ்ச்சிகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் இவ்விளையாட்டு சிறுவர்களிடத்தில் மறைமுகமாக கற்பிக்கின்றது.
              இந்த விளையாட்டினை சமுகத்தில் ஒப்பிடுகையில், ஆடு - மக்கள் சமுதாயத்தையும், நரி - முதலாளித்துவ சமுதாயத்தையும் குறியீடாக கருதலாம். இதில் சங்கிலியாக நிற்கும் சிறுவர்கள் ஊடகத்தினோடு ஒப்பிடலாம். ஆனால் இன்றைய உலகமயமான உலகில் நரிகளிடம் காவலர்கள் வேலை செய்தால் ஆட்டின் நிலைமை என்னவோ அதுதான் நிலவுகின்றது.
              சமுகத்தில் தொடக்க காலத்தில் மக்களின் வெகுசன கருத்தியலை பேசும் ஊடகமாக நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்கள் இருந்தன. பிறகு அந்த இடத்தினை திரைப்படங்கள் பிடித்துக் கொண்டன. இன்று அந்த இடத்தினை தொலைக்காட்சி தொடர்கள் நிரப்புகின்றன. இது போக சிறுவர்களின் விளையாட்டினை எல்லாம் மாற்றியமைத்தது, கேலிச்சித்திர தொடர்களும்(cartoon programmes ), WWE, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், video games ம் காரணமாக அமைகின்றன.
             வர்க்க போராட்டத்தை கற்றுத் தந்த விளையாட்டுகளை எல்லாம் அழித்து விட்டு, இந்த குடிமை சமூகத்தினை அடிமைப்படுத்தும் வகையில் விளையாட்டுகளை எல்லாம் மாற்றி அமைத்தது ஆதிக்க சமுதாயம். இதற்கு முழு பிரதிமை பெற்றவர்கள் மக்களே.

ஞாயிறு, 20 மே, 2012

"உடை"யும் பண்பாடு

பண்பாடு என்பது கண்ணாடித் துண்டுகளில் தெரியும் சூரியனின் பிம்பம் போன்றது. நித்தமும் பிம்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அதன் மூலப்பிரதி என்றும் மாறுவதில்லை.
உடை என்பது வெறும் உடுத்திக் கொள்கின்ற ஆடை, உடலை மறைக்கின்ற துணி என்பதோடு மட்டுமில்லாமல் அது ஒரு சமுகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

பண்பாடு என்பது சமூகவியல் பார்வையில் இரண்டு வகையாக பார்க்கப்படுகின்றது.
  1. பொருண்மைத் தன்மையுடையது.
  2. பொருண்மைத் தன்மையற்றது.

பொருண்மைத் தன்மை : Material culture
ஒரு இன மக்கள் பயன் படுத்துகின்ற பொருட்கள், வீடுகள், தெரு அமைப்புகள், வழிபாட்டு தளங்கள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை தீர்மானிக்கும் பண்பாடானது பொருண்மைத் தன்மையுடையது.


பொருண்மைத் தன்மையற்றது : Non-material culture
இது ஒரு சமுகத்தில் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சமுக ஒழுக்கங்கள் ஆகியவற்றை சார்ந்தது. இதன் மூலம் பண்பாடு ஒருவனது எண்ணங்கள், உணர்வுகள், நடவடிக்கைகளை வடிவமைக்கின்றது. பொருண்மைத் தன்மையற்ற பண்பாட்டினை தீர்மானிக்கும் நான்கு முக்கிய காரணிகள் , குறியீடுகள், மொழி, சமுக மதிப்பீடுகள், சமுக நெறிமுறைகள் ஆகியன.

          இந்த கருத்தை நாம் உடுத்துகின்ற உடையுடன் ஒப்பிடுகையில் உடையானது ஒரு பண்பாட்டின் அடையாளமாக விளங்குவதை உணர்ந்து கொள்ளலாம். நாம் உடுத்துகின்ற ஆடை ஓவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. தமிழ் நாட்டில் பெரும்பாலோனோர் அணியும் ஒரு ஆடையாக லுங்கி உள்ளது. இதனை ஈழத்தில் சரம் என்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஈழத்தினை சேர்ந்த தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஒரு சிறு வேற்றுமை காணப்படுகின்றது. இங்கு புவியியல் இடம் சார்ந்து வேறு படுகின்றது. கிராமங்களில் வசிப்பவர்கள் கட்டுவதற்கும், கடற்கரையோரம் மீன் பிடிப்பவர்கள் கட்டுவத்ர்க்குமே வேறு பாடு உள்ளது. இங்கு தொழில் முறை சார்ந்து வேறு படுகின்றது. இதில் வயது சார்ந்த வேறு பாட்டையும் காணலாம். ஊரில் இளவட்டப் பையன்கள் கட்டுவதற்கும், பெரியவர்கள் லுங்கி கட்டுவதற்கும் கூட வேறுபாடு உள்ளது.

           உடையானது பண்பாட்டு அளவில் அது பொருண்மைத் தன்மையுடையதாக உள்ளது. கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, ஜிப்பா என பல வகைகள் உள்ளன. ஆனால் அவை காலம் சார்ந்தும் சூழ்நிலை சார்ந்தும் அவற்றை அணிகின்றனர். இங்கு அதன் பொருண்மைத்  இழந்து போய் விடுகின்றது.

திருமண நிகழ்சிகளிலும், கோயில் திருவிழாக்களின் போதும் லுங்கி அணிவதில்லை. அன்றைய தினங்களில் வேட்டி அணிவதையே விரும்புகின்றனர். ஒரு சமுக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், கோயிலுக்கு செல்லும் போது வேட்டி தான் கட்ட வேண்டும், கோயிலுக்குள் வேட்டி மடித்து கட்டக் கூடாது என்ற நம்பிக்கைகள் உள்ளது. பெரும்பாலும் திருவிழா நாட்களில் புது துணி வாங்குவது வழக்கம்.

ஆடி மாதங்களில் தள்ளுபடிக்கு துணி வாங்குதல் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஆடி மாதம் என்பது சடங்கு என்பதையும் தாண்டி ஒரு வியாபாரத்தந்திரமாக துணிக்கடைகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த துணிக்கடைகள் விற்கும் துணிகள் நமது பண்பாட்டை சாராதவை என்ற போதிலும் அதனை விற்க நமது மக்களிடையே உள்ள பண்பாட்டு, மதம் சார்ந்த நம்பிக்கை தேவை படுகின்றது. இங்குதான் நமது சமுகம் எனும் கண்ணாடியில் பண்பாட்டு சூரியனின் நிழல் உடைகின்றது.

புதன், 18 ஏப்ரல், 2012

இன்னும் மறுபிறவிதான்...

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி, தூத்துக்குடியில் கர்ப்பிணிப் பெண் இறந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சேது லட்சுமியை அப்பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயக்கயியல் மருத்துவரான சேதுலட்சுமி சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சயளித்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என கூறுவர். கிராமங்களில் புள்ளத்தாச்சி பெண்கள் மரணமடைந்தால் அவர்களின் நினைவாக சுமைதாங்கி கல்கள் வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. அன்று போதிய மருத்துவ வசதி இன்மையால் பல பெண்கள் இறந்து வந்தனர். ஆனால் இன்று மருத்துவ வசதிகள் வளர்ச்சி அடைந்து உள்ள போதும் பெண்களுக்கு பிரசவம் என்பது ஒரு மறுபிறவியாகவே இருந்து வருகின்றது. சுகப்பிரசவம் என்பது தற்பொழுது அரிதாகவே உள்ளது. இதற்கு சில தனியார் மருத்துவமனைகளே காரணமாகின்றன.

பிரெஞ்சு தத்துவவாதி மைக்கல் பூக்கோ, "மருத்துவமனைகள், வகுப்பறை, சிறைச்சாலை" ஆகியவை மூன்றும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை என குறிப்பிடுகின்றார். இவரது கருத்துப்படி, முற்றிலும் அறநெறிகளை துறந்து விட்ட ஒரு சமூகம், வணிக மயமாகிவிட்ட மருத்துவத்துறையில் உயிர்களின் மீது அக்கறை குறைந்து பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படுகின்றது.

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேலானோர் இறந்தனர். இச்சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையில் மருத்துவமனையில் பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என காவல்துறையினரால் கூறப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் மருத்துவர் ஒருவர் பள்ளியில் படிக்கும் தன் மகனைக் கொண்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது போக பணத்திற்காக சில தனியார் மருத்துவமனைகள் சுகப்பிரசத்தினைக்கூட அறுவை சிகிச்சை அளித்து லாபம் பார்க்கின்றனர். இதுபோக மாறிவருகின்ற உணவு பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இன்மை, பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு என்பன போன்ற காரணங்களால் பிரவத்தின் போது மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டிற்கான சி.என்.என். நாயகன் விருதினை ராபின் லிம் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவில் தாய்மையடையும் பெண்களுக்கு மருத்துவ சேவையினை ஆற்றி வருகின்றார். ஆரோக்கிய அன்னை பூமி இயக்கம் மூலம் கர்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவ சேவை செய்து வருகின்றார். 

ஒவ்வொரு குழந்தையின் முதல் மூச்சுக் காற்றும் பூமியில் படும்போது அமைதியையும் அன்பையும் சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு அன்னையும் திடமான ஆரோக்கியமான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை"யும் பாதுகாப்பாக பிறக்க வேண்டும். ஆனால் இந்த பூமியில் எங்கும் இது போல நடக்க சாத்தியமில்லை" என ராபின் லிம் கூறுகின்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என்ற தகவலை உலக சுகாதார மையம் அளிக்கின்றது. இதில் இந்தியாவில் 47.57/1000 என்ற விகிதத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் உள்ளதாக தகவலை அளிக்கின்றது.

பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது.

மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இந்த காலத்திலும் குழந்தை பிறப்பது என்பது பெண்ணுக்கு மறு பிறவியாகவே இருந்து வருகின்றது.

ஊடகங்களும் தொன்மங்களும்

"ஊடகங்கள் மூலம் தினந்தோறும் தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது" என நாட்டரியல் அறிஞர் முனைவர் இ.முத்தையா கூறுகின்றார்.

 "சங்க கால மக்கள் நாட்டார் மரபு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் இ.முத்தையா அவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் முன்னாள் துறைத்தலைவர் ஆவார்.

சங்க கால கவிதைகளில் சடங்கு மற்றும் தொன்மம் சார்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெறுகின்றன. இயற்கையையும் பெண்ணையும் பற்றிய புரிதல் தான்  சங்க இலக்கிய அகப்பாடல்களாக உள்ளன. இயற்கையும் பெண்ணும் வளமைத் தன்மையுடையவர்கள். வெப்பம் என்ற இயக்க ஆற்றல் இருவரிடமும் உள்ளது. இந்த குறியீடுகளின் வெளிப்பாடு தான் முளைப்பாரி சடங்குகளில் வெளிப்படுகின்றது. முளைப்பாரி குடம் பெண்ணின் கருப்பையை குறிக்கின்றது. சமுக இயக்கத்திற்கு இயற்கையும் பெண்ணும் முக்கியம் என்பதின் வெளிப்பாடே இது என முனைவர் இ.முத்தையா கூறுகின்றார்.

சங்க காலப் பாடல்கள் முழுவதும் தொன்மங்களை உருவாக்குகின்றன என இவர் கூறினார். அதே நேரத்தில் தொன்மம், பழமை என்ற இரு சொல்லும் வேறுபட்டு முரண்பட்டு உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.

இன்று வெளிவருகின்ற செய்திகள், விளம்பரங்கள் மூலமாக பல விதமான தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட ஐந்து வட இந்தியர்கள் மீது ஊடகங்கள் தொடர்ந்து தொன்மங்களை உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் மக்களிடையே தினந்தூரும் தொன்மங்களை உருவாக்கி வருகின்றன என இவர் கூறினார்.

ஊடக விளம்பரங்களும் பல வித தொன்ம கட்டுடைப்பினை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. "ப்ரீத்திக்கு நான் கியாரண்டீ " என்பன போன்ற விளம்பரங்கள் மொழி மூலம் ஆக தொன்மங்களை உருவாக்குகின்றது. "பலம் வாய்ந்த பீமனால் ஒரு கல்கூரையை உடைக்க முடியவில்லை" என சித்தரிக்கும் விளம்பரம் மூலம் புராணங்கள் மீது ஒரு புதிய தொன்மம் உருவாக்கப்படுகின்றது.

ஊடகங்கள் தெரிநிலை தொன்மம், குறிப்புநிலை தொன்மம் என இரு வேறு நிலைகளில் தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்கிறார்.

வியாழன், 15 மார்ச், 2012

ஊருக்கு செல்லும் வழி...

நீச்சல் அடிக்க கற்றுக் கொண்ட கிணறு
திருட்டுத் தனமாய் பறித்த மாமரம்
பிடித்து மீண்டும் பறக்கவிட்ட தும்பி
வாடகை சைக்கிளில் அடித்த குரங்கு பெடல்

ஏரிக்கரையோரம் உள்ள நாவல் மரம்
கால் உடைந்த அய்யானார் சிலை
ரயில் வண்டி விளையாடிய மாட்டுக்கொட்டகை
அக்காக்களோடு விறகு வெட்டச் சென்ற ஏரிக்கரை

மூடிக்கிடக்கும் டூரிங் டாக்கீஸ்
போஸ்டர் ஒட்டியிருந்த டீக்கடை
புளிய மர நிழலில் உள்ள சுமைதாங்கிக் கல்
பாதி அரவையிலேயே கரண்ட் போன ரைஸ்மில்லு


இவையெல்லாம் அழைக்கின்றன...
நான்கு நாட்கள்
விடுமுறைக்காக
காத்திருக்கின்றேன்...

சாகின்ற வரைக்கும் வாழ்கின்ற வயசு

சாகின்ற வரைக்கும் வாழ்கின்ற வயசு
- பேட்டைக்காரன் வ. ஐ. ச. ஜெயபாலன் 
ஆடுகளம் படத்தில் நடித்த பேட்டைக்காரனை தமிழ் திரைப்பட ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். தான் நடித்த முதல் படத்திலேயே இந்திய அரசின் 2010 ஆம் ஆண்டின் சிறப்பு நடுவண் குழு வழங்கிய தேசிய விருதினை வென்றார். நடிகராக தமிழ் ரசிகர்கள்ளல் அறியப்படுகின்ற இவர் ஓர் ஈழத்துக் கவிஞர். இவர் ஈழத்தின் வன்னிப் பகுதியை சார்ந்தவர். நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர். இவரது பெயர் வ. ஐ. ச. ஜெயபாலன்.
இவர் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் மாணவர்களோடு புதன்கிழமை ( மார்ச், 14, 2012 ) அன்று நடந்த சந்திப்பில் நடைபெற்ற விவாதங்கள்...

ஆடுகளம் படத்தில் நடிப்பதற்காக, மதுரை வட்டார மொழியை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே நான் மதுரையில் தங்கி கற்றுக்கொண்டேன். மடுறரை வட்டார மொழியையும், உடல் மொழியையும் கற்றுத்தர அங்கு பல நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களை எல்ள முடியும். அங்கு "Sit like Kingfisher with Kingfisher"என்பது தான் பாடம்.லாம் தமிழ்நாடு அரசு தான் நடத்துகின்றது. பச்சை நிற போர்டு போட்டு எல்லா இடங்களிலும் உள்ள டாஸ்மாக் பார் தான் அது. இங்குதான் மக்களின் இயல்பான உடல்மொழியையும் பழக்கங்களையும் எளிதில் கற்றுக்கொள்

சினிமாவில் நடிக்க விரும்பும் கனவு கதாபாத்திரம் என்ன?
சினிமாவில் நடிப்பது என்பதே எனது கனவு கிடையாது. கவிஞன் ஆக வாழ்வது தவிர வேறு எதுவும் எனது ஆசையில்லை. மற்றவரை பணிய வைக்காமல், மற்றவரை பணிய அனுமதிக்காமல் வாழ்வதே எனது லட்சியம்.

எழுத்தாளர் - நடிகர் என்ன வேறுபாட்டை உணர்கின்றீர்கள்?
எழுத்து நடிப்பு இரண்டுமே இருவேறுபட்ட கலைவடிவம். கவிஞனாய் இருக்கும் போது எல்லாம் கவிஞனது கட்டுப்பாட்டில் இருக்கும். கவிதை எழுத எதுவும் பெரியதாய் செலவு இல்லை. ஒரு பேனாவும் தாளும் போதும். சினிமாவில் நடிக்கும் போது நடிகன் இயக்குனரது .கட்டுப்பாட்டில் இருப்பான். ஆடுகளம் படத்தில் நடிக்க வெற்றிமாறன் என்னை அணுகிய போது, நடிப்பு tஎனக்கு ஓஹ்து வருமா என சந்தேகத்தோடே கேட்டேன். வெற்றிமாறன் தான் நம்பிக்கையூட்டி என்னை நடிக்க வைத்தார். சினிமாவில் நடிப்பு என்பது கண் கட்டி வித்தை போன்றது. இயல்பான வெளிப்பாடுகளை விட கேமரா கோணங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தும் பாவனைகளே சிறந்த நடிப்பாகின்றது. ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபத்திரத்திற்கு உயிர் கொடுத்ததில் நடிகர் ராதாரவியின் குரலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் வேலைகளை இரண்டு நாட்களில் முடித்து விடுவார். அனால் இப்படத்திற்காக தனி கவனம் எடுத்து என் உடல் மொழிக்கு ஏற்ப குரலை மாற்றி, கிட்டதட்ட இரண்டு வாரங்கள் வரை டப்பிங் பேச எடுத்துக் கொண்டார். பேட்டைக்காரன் கதாபாத்திரத்திற்கு அவரது குரல் இன்னும் உயிர் சேர்த்தது.


தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் எதிர்மறையான கதாபத்தித்தில் நடித்தது உங்கள் வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை உண்டாக்கியதா?

இந்த படத்தில் இருந்து நடிப்பைக்க் கற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதுவும் இல்லை.


சினிமாவில் நடித்த பிறகு புலம் பெயர்ந்த தமிழர்களிடம் உங்களைப் பற்றிய அடையாளம் சார்ந்த பிம்பங்கள் என்ன?
நவீன இலக்கியத்தின் மீது இன்றைய இளைஞர்களிடம் நல்ல ஈடுபாடு உள்ளது.நவீன இலக்கியவாதியாக இருப்பது இளமையை வாழ்வதற்கு நிகராய் உள்ளது. பல இளம் படைப்பாளிகளுடன் நானும் ஓர் படைப்பாளியாய் இருப்பது ஓர் உத்வேகத்தை அளிக்கின்றது. நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகின்றது. வயது முதிர்ந்த தோழன், இளம் வயது தோழிக்கும் இடையே நிகழும் உரையாடல் போல நான் எழுதிய கவிதை ஒன்றில் இடம்பெறும் வரிகள்,
                    "தோழா உனக்கு எத்தனை வயசு?
                     தோழி எனக்கு 
                     சாகின்ற  வரைக்கும் வாழ்கின்ற வயசு..."

தமிழத்தில் உள்ள தமிழர்களிடம் உங்களைப்பற்றிய பிம்பம் என்ன?
படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கக்கூடிய நாடு தமிழ்நாடு. நல்ல கலைஞர்கலை மதிக்கும், எல்லை கடந்து நேசிக்கும் பண்புடைய ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சினிமாவில் நடித்தால் முதல்வனாகி விடலாம் என்பதெல்லாம் ரசிகர்களை கொச்சைப்படுத்தும் போக்கு. சங்க இலக்கியமான புறநானுற்றில், தன வீற்றிகு வந்த புலவரை உபசரித்து, தன மனைவியிடம் எனக்கு என்ன மரியாதை செய்கின்றாயோ அதையே இப்புலவனுக்கும் அளிக்க வேண்டும் என சொல்லும் தலைவனைப் பற்றிய பாடல் உள்ளது. இப்பாடலில் வரும் தலைவன் போல பெருந்தன்மை கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள். இதில் வரும் சங்க இலக்கியப் புலவனைப் போன்றவன் நான்.

இன்று கூட நான் மதுரைக்கு சென்றால் அங்கு உள்ளவர்கள் என்னை ஒரு உறவுக்கரானாகவே கருதுகின்றனர். நேசித்தலும், நேசிக்கப்படுவதைவிட வாழ்வை செழுமைப் படுத்தும் செல்வம் வேறு எதுவும் இல்லை.

( இவரது வலைப்பூவினை காண இங்கே சொடுக்கவும்...