- சில இசைக் குறிப்புகள்:
- கலைத்தன்மைக் கொண்ட ஒரு இசைக்குறிப்பன்று. இசை குறித்த சில சமூக அவதானிப்புகள்.
- மனிதமனம் அடிப்படையில் குரூரமான வன்மத்தையும் காமத்தையும் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளது. பண்பாடு என்பது குரூரமான மனித மனதினை கட்டுப் படுத்தும் ஒரு நெறிமுறையாக உள்ளது. அந்த பண்பாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு வெளிப்படுத்தப்படும் குரூர எண்ணங்களே கலைப் படைப்புகள் ஆகின்றன. கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வளர்ச்சியும் பண்பாட்டு மாற்றங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஓவியம், சிற்பம், இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படுகின்றது.
- இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமன்று. அது சமூக பண்பாட்டு பொருளாதரத் தளத்தில் பல அர்த்தங்களை கொடுக்கின்ற ஒரு பிரதியாக உள்ளது. இசை என்பது சமூக வரலாற்று நினைவுகளாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகின்றது. அவற்றை இசை வெளிப்பாட்டு முறைமைகளில் நேரிடையாக காணலாம். நாட்டார் வழிபாட்டில் ஒரு நிகழ்வான சாமியாட்டம் எனும் நிகழ்வு தொல் சமூகத்தினரிடையே இருந்த போர் நடனத்தின் நீட்சியாகவே காணப்படுகின்றது.
- தமிழர்களின் வாழ்வில், ஆடலும் பாடலும் என்பது இறைவழிபாட்டோடும், சடங்கியல் முறையிலும் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளது. தாலாட்டு பாடல் முதல் ஒப்பாரி வரை ஒவ்வொரு செயல்களும் இசையுடன் இணைந்தே உள்ளது. நாட்டார் கதைப் பாடல்களை, "கடந்த கால நினைவுகளுக்கும், நிகழ்கால நிகழ்வுகளுக்கும் உள்ள முரண்பட்ட தொடர்பு" என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம். மதுரை வீரன், காத்தவராயன் கதை, கான்சாகிபு சண்டை போன்ற நாட்டார் கதைப் பாடல்களில் காணப்படும் சோக முடிவுகளை, கடந்த கால வரலாறு - மக்களின் நினைவுகள் - சமகால சாதிய ஆதிக்கம் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி காணலாம்.
- பிரெஞ்சு அறிஞர் Jacques Attali தனது Noise: The Political Economy of Music என்ற நூலில் இசை என்பது கொலைச்செயலின் கலைவடிவமாக உள்ளது எனக் கூறுகின்றார். தொன்மை சமூகத்தில் இசை என்பது போர் பற்றிய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு கலை வடிவமாக இசை உள்ளது. இசை என்பது ஒரு பண்பாட்டு அடையாளம். அது இனவரைவியல் கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. ஒரு சமுகத்தின் தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை நினைவுகள் இசை மூலம் உருவாக்கப்படுகின்றது.
- இசைக்கு மொழி இல்லை, அது ஒரு உலகப்பொது மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் என்றாலும் இசை இயல்பில் அப்படி இல்லை. இசை தனக்கென ஒரு மொழியையும், தளத்தையும் கொண்டுள்ளது.
- மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் படி, முதலாளியம் என்பது ஒரு பெரு அமைப்பு. பண்டம் என்பது அதன் அடிப்படை அலகு. இன்றைய சூழலில் முதலாளிய சந்தைப் பண்டங்களுள் ஒன்றாக இசை திகழ்கின்றது. இசைக்கலைஞன், இசைக்கருவி, இசை ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவு என்பது வெறும் கலைத்தன்மை வாய்ந்தது மட்டுமன்று. அது சமூக எதார்த்தங்களை பிரதிபலிக்கின்றது. "மூலதனம் சா
ர்ந்து இயங்குகின்ற தொழில் நிறுவனங்களை காட்டிலும் கலைத் துறையில் பல தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்." (Zeidler, 2000, Entertainment and Internet collision course ahead). - சாலை முனைகளிலும், தொடர் வண்டிகளிலும் பாடல் பாடி யாசகம் கேட்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இசையின் அடிப்படைத் தன்மைகளை உணர்ந்த ஒரு நல்ல அறிஞர்களாக திகழ்கின்றனர். அதன் நேரெதிராக இசையை அதிகாரத் தன்மையோடு பயன்படுத்தும் ஒரு ஏகாதிபத்யவாதியாக திரை இசை, மேடைக் கச்சேரிகள், தொலைகாட்சிகள் மற்றும் பண்பலை ஆகியன திகழ்கின்றன.
புதன், 3 ஜூலை, 2013
'பண்'பாடும் பண்பாடு
வெள்ளி, 31 மே, 2013
தமிழ் ஊடகங்களில் உடையின் அதிகார அரசியல்
சமூகம்
என்பது பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. இத்தன்மை சமூக வேறுபாடுகளின்
வாயிலாக வெளிப்படுகின்றது. அகநிலை சார்ந்த அளவில், சமூக வேறுபாடுகளுக்கு
சுயம் மற்றும் சுயம் சார்ந்த உரிமைகளும் அடையாளங்களும் காரணாமாக உள்ளது.
ஒரு மனிதனின் சுய வெளிப்பாட்டு உரிமையாக உடை உள்ளது. உடை என்பது சமூக
செயல்பாடுகளில் முக்கியமான ஒரு பண்பாட்டு பிரதியாக விளங்குகின்றது.
மனிதனின் இன்றியமையாத அடிப்படை தேவைகளுள் ஒன்றாக உடை இருந்து வருகின்றது.
உடை என்பது மனிதனுக்கு குளிர் மற்றும் வெப்பங்களில் இருந்து ஒரு
பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. புவியியல் நில அமைப்பு மற்றும் காலநிலை
மாற்றங்களுக்கு ஏற்ப உடையின் தன்மை மாறுபடுகின்றது. தமிழர்கள் உடையை ஆடை
என்றும் கூறி வருகின்றனர். உடையணிதல் என்பது அலங்கரித்துக் கொள்ளுதல்
மற்றும் தன் சுய இரசனையை வெளிப்படுத்துதல் ஆகிய செயல் பாடுகளைக்
கொண்டுள்ளது. ஒரு சமூகத்தின் அறவொழுக்கங்கள், ரசனைத் தன்மை ஆகியன அவர்கள்
உடுத்தும் உடையின் மூலமாக வெளிப்படுகின்றது. உடை என்பது சமூகத்தில்,
ஒருவனது சமூக மற்றும் பொருளாதார படிநிலைகளை அடையாளப்படுத்தும் ஒரு பிரதியாக
உள்ளது.
உடையணிதல் என்பது சமூக - பண்பாட்டு செயல்பாடுகளுள் ஒன்று. பாலின
பாகுபாடு, சமூக படிநிலை மற்றும் தொழில் ஆகியவற்றை அடையாளப் படுத்துபவையாக
உடைகள் இருந்து வருகின்றது.
உடையின் அதிகாரம்:
உடையணிதல் என்பது அணியும் உடைகளைப் பொறுத்து சமூகத்தில் மக்கள் மீது
தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. தமிழக வரலாற்றில், தென்
தமிழகத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம் உடையின் சாதீய அரசியலை நமக்கு
தெளிவு படுத்துகின்றது. "ஆண்களாயினும் பெண்களாயினும் தாழ்த்தப்பட்ட
சாதியினைச் சேர்ந்தவர்கள் கணுக்காலுக்கு கீழே உடையணியக் கூடாது."
(தொ.பரமசிவன், 1997, 50). இங்கு பிராமணர்கள் குறிப்பாக வைணவர்கள் அணியும்
உடையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. "இறைவன் ஒருவனே
ஆண்", "ஆணுக்கு கட்டுப்பட்டவள் பெண்" "இறைவனின் முன்பு அனைவரும் பெண்"
ஆகியன வைணவ கருத்தியல். அதனால் தான் சென்ற நூற்றாண்டு வரை பிராமணர்கள் மீசை
வைத்துக் கொள்வதில்லை. இதில் விதி விலக்காக பாரதியார் இறைவனை பெண்ணாக
வர்ணித்து பாடல் இயற்றினார். இந்த கருத்தியல்களின் நீட்சியே
கணுக்கால்களுக்கு மேலே அணியும் ஆடைகள்.
சங்க காலங்களில் தமிழர்கள் மேலாடை அணிந்ததாக தரவுகள் இல்லை. சில
உயர்குலப் பெண்கள் மட்டும் முலைகச்சை அணிந்ததாக சங்கப் பாடல்கள்
தெரிவிக்கின்றன. போர் காலங்களில் ஆண்கள் 'கச்சை' எனும் ஆடையை
அணிந்துள்ளனர். இந்த ஆடை தொடைக்கு மேலே கட்டப் பட்டிருக்கும்.(பழைய
எம்.ஜி.ஆர். படங்களில் சிலம்புச் சண்டையின் போது அணிகின்ற ஆடை). இன்றும்
கிராமங்களில் ஏதாவது கோபமாக பேசும் போது, "ஏண்டா இப்படி கச்ச கட்டிக்கிட்டு
வர..." என்று பெரியவர்கள் கூறும் வழக்கத்தில் இருந்து இந்த செய்தியின்
உண்மையை அறிந்து கொள்ளலாம்.
கிராமங்களில் ஆதிக்கச் சாதியினர் தவிர மற்றவர்கள் ஆடை அணியும் போது
கணுக்கால்களுக்கு கீழே அணியக் கூடாது. இந்த வேறுபாடுகளை கிராமத்தில் மக்கள்
வேட்டி அணிவதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வேறுபாடுகளை முழுக்கால்
சட்டை (பேன்ட்) ஓரளவு களைந்துள்ளது. கிராமத்தில் உடையின் மற்றொரு அதிகாரச்
சின்னம் 'துண்டு'. தோளில் துண்டு அணிதல் என்பது உயர்
சாதியினர்களுக்கு மட்டும் உரியது. உழைக்கும் மக்கள் துண்டினைக் கொண்டு
'சும்மாடு கோணுதல்' மூலம் சுமைகளை தூக்கிச் செல்லும் போது தலைக்கு
பாதுகாப்பாக பயன்படுத்துகின்றனர். தலைப்பாகை கட்டுதல் என்பது
சிறப்புக்குரிய ஒரு செயலாக கருதப்படுகின்றது. துண்டினை இடுப்பில் கட்டுவது
பணிவின் அடையாளமாக கருதப் படுகின்றது. கோயில் சிற்பங்களின் மூலம் இந்த
தகவலை அறிந்து கொள்ளலாம்.
அதிகாரத்தின் பண்பாட்டு உலகமயமாக்கல்:
உடையின் மீது அதிகாரத்தை நிகழ்த்தி வந்த ஒரு சமூகம் உலகமயமாக்கலுக்கு பின்னர் அது தனது ஆதிக்கத்தை நவீனம், நாகரீகம் என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகின்றது. காலம் காலமாக மேலாடை அணியாத பெண்கள் பல ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர் 'ரவிக்கை' அணியும் உரிமையை பெற்றனர். நாகரிக உடை என்ற பெயரில் Sleeveless உடைகளை அணியும் பெண்கள் பல ஆண்டு போராட்டத்தை நுகர்வு பண்பாட்டில் மறந்து விடுகின்றனர். உடைகள் என்பது படையெடுப்பு, போர் மற்றும் இடப் பெயர்வு மூலம் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகின்றது.
துண்டு என்பது அதிகாரத்தின் குறியீடாக இருந்து வந்ததின் நீட்சி தான்
இன்றுவரை விழாக்களில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும்
மரபு. இன்றைய நவநாகரீக சூழலில் துண்டு எனும் அதிகார மையத்தின் மறு
பிரதிநிதித்துவத் தன்மைக் கொண்டதாக coat suit ஆடைகள் விளங்குகின்றன. துண்டை
இடுப்பில் கட்டிக் கொள்வதின் மறு வடிவமே சட்டையை மடித்துக் கொள்ளுதல் (Tug
in).
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா','குட்டிச்
சுட்டீஸ்', 'நாளைய இயக்குனர்' போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் அணிந்து
இருக்கும் கோட் உடை என்பது ஒரு பண்பாட்டு ஏகாதிபத்தியமாக உள்ளதை அறிய முடிகின்றது.
உடையின் அதிகாரம்:
அதிகாரத்தின் பண்பாட்டு உலகமயமாக்கல்:
உடையின் மீது அதிகாரத்தை நிகழ்த்தி வந்த ஒரு சமூகம் உலகமயமாக்கலுக்கு பின்னர் அது தனது ஆதிக்கத்தை நவீனம், நாகரீகம் என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகின்றது. காலம் காலமாக மேலாடை அணியாத பெண்கள் பல ஆண்டு போராட்டங்களுக்கு பின்னர் 'ரவிக்கை' அணியும் உரிமையை பெற்றனர். நாகரிக உடை என்ற பெயரில் Sleeveless உடைகளை அணியும் பெண்கள் பல ஆண்டு போராட்டத்தை நுகர்வு பண்பாட்டில் மறந்து விடுகின்றனர். உடைகள் என்பது படையெடுப்பு, போர் மற்றும் இடப் பெயர்வு மூலம் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகின்றது.
வியாழன், 9 மே, 2013
சில
சில : Some ideas on IPLT20 Cricket
சமூகத்தில் விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குத் தன்மையைத் தாண்டியும் அது சில பண்பாட்டுக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. விளையாட்டு என்பது நாட்டார் விளையாட்டு, நிறுவனமயமாக்கப்பட்ட விளையாட்டு என இரு வடிவங்களில் உள்ளது. அவை வெளிப்படுத்தும் பண்பாட்டு அரசியல் என்பது மிகவும் அபாயகரமானதாக உள்ளது. "சமூகம் என்ற ஒன்று தான் உருவாக்கும் அல்லது தன் மீது கவியும் ஒரு கருத்தியலையே விளையாட்டுகளின் வழியே வெளிப்படுத்துகின்றது. (தொ. பரமசிவன், 2009, 90). விளையாட்டுகளில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களின் மூலம் சமூக அசைவியக்கங்களை புரிந்து கொள்ள இயலும்.
சமூக அசைவியக்கங்களில் அடிப்படையாக வன்மமும், காமமும், பொருளாதாரமும் உள்ளது. இவற்றின் அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே பண்பாடு(Repression of Expression). இவை மூன்றும் சமூக நியதிகளுக்கு உட்பட்டு தன் எல்லைகளில் இருந்து மீற தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. பண்பாடு என்பது அசைவற்ற தன்மையினைக் கொண்டுள்ளது. எத்தகைய சமூக புரட்சிகள் ஏற்படினும் அது தன்னை தனக்கே உரிய பாணியில் தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு காலனி ஆட்சி காலத்தில் இந்தியாவில் பரவிய ஒரு விளையாட்டு. ஒரு சமூகத்தினை அடிமைப் படுத்துவதற்கு அரசும், இராணுவமும் மட்டும் அவசியமில்லை. கலை மற்றும் பொழுதுபோக்கு பண்பாட்டின் மூலமும் தொடர்ந்து அடிமைப் படுத்தலாம் என்பதற்கு கிரிக்கெட் ஒரு சிறந்த உதாரணம். இந்த கிரிக்கெட் விளையாட்டு இன்றைய பொருளாதார தளத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றது. பண்பாட்டில் IPLT20 கிரிக்கெட் என்ற விளையாட்டு, அறிவு சார்ந்த கருத்தியல் தளத்தில் பெருந்திரள் மக்களை குருட்டுத்தனமானவர்களாக மாற்றி வருகின்றது.
சமூக உருவாக்கம் மற்றும் மாற்றம் பற்றிச் சிந்திப்பவர்கள் விளையாட்டுகளின் பங்கினைக் கூர்மையாக மதிப்பிட்டு அறிய வேண்டும். (தொ. பரமசிவன், 2009, 95). இன்றைய சமூக சூழலில் விளையாட்டின் பாத்திரம் என்பது நுகர்வுப் பண்டமாக உள்ளது. அவை மக்களின் கூட்டாண்மை நினைவுகளை முன்னெடுத்துச் செல்லுகின்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு இன்றைய சமூக சூழலில் மதத்தின் நவீன வடிவமாக வெளிப்படுகின்றது.
பண்டைய காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெரும் போது அந்நாட்டில் இருந்து செல்வங்களைக் கொள்ளையடித்து வந்தது மட்டுமின்றி அந்நாட்டு மக்களை அடிமையாக கொண்டு வருவதை மரபாகக் கொண்டிருந்தினர். அவ்வாறு பிற நாடுகளில் இருந்து அடிமையாகக் கொண்டு வரப்பட்ட பெண்கள் பலவித சுரண்டல்களுக்கு உள்ளாயினர். ராஜராஜசோழன் காலத்தில் இத்தகைய வரலாற்று குரூரங்கள் நடைபெற்றதை வரலாற்று தரவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் தேவரடியார் மரபு (Devadasi) தமிழகத்தில் மீண்டும் உருவாக ராஜராஜசோழன் முக்கிய காரணமானார்.
பண்பாடு என்பது பெண்களின் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப் படுகின்றது என தொ. பரமசிவன் குறிப்பிடுகின்றார். அதனால் தான் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அந்நாட்டு பெண்களை அடிமைப்படுத்த அனைத்து ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்களும் கருதுகின்றனர்.
பெண்களை அடிமைப்படுத்த மதங்களும் வேதங்களும் ஒரு கருத்தியல் ஆயுதமாக விளங்கியது. அதனை நடைமுறை படுத்த இசை, நடனம் போன்ற கலைகள் உதவி வருகின்றது. தமிழகத்தில் அவ்வாறு உருவாகிய ஒரு மரபு தான் தேவரடியார் மரபு.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் 'கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர் கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்' (லெஸ்லி சி.ஒர், 2005, பக்கம் 22) என குறிப்பிடுகின்றார். இருப்பினும் தேவரடியார் என்பவர்கள் ஆடற் பெண்டிராக இருந்தனர் என்பதனை தமிழக கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சிலப்பதிகாரத்தில் ஆடல் வகைகளில் ஒன்றாக அல்லியம் குறிப்பிடப்படுகின்றது. யானை வடிவில் வந்த கம்சனை கொள்வதற்காக கண்ணன் ஆடிய நடனம் அல்லியம் என்பது சிலப்பதிகாரம் தரும் செய்தி. பதுமைகளின் வாயிலாக இவ்வாடல் நடைபெற்று வந்ததை புறப்பாடல் ஒன்றின் மூலம் அறியப்படுகின்றது.
".....வரி வனப் புற்றே
அல்லிப்பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப" (புறநானூறு : 33:16)
பாவைகளை வைத்து ஆடும் கூத்து சங்க காலத்தில் இருந்ததை இதன் மூலம் அறியலாம். (நர்மதா , 2013, பக்கம்- 36)
தஞ்சைக்கோவில் பணியாளர் 1100 பேரில் 400 பேர் ஆடல் மகளிர் ஆவர். இவர்கள் தளிச்சேரிப் பெண்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர்.(தொ.பரமசிவன், 2012, 80)
பண்பாட்டின் உலகமயமாக்கல்:
பண்பாடு என்பது உலக மயமாக்கத்தினால் அது பூதமாக மீட்டுருவாக்கப் படுகின்றது. கோயில்களில் ஆடற் பெண்டிர் என அடிமைப் பட்டுக் கிடந்த பெண்களை சமூக விடுதலை இயக்கங்கள் போராடி மீட்டதை இன்றைய உலகளாவிய வணிக பொருளாதாரம் மீண்டும் தனது நிலைக்கு செல்ல துணை நிற்கின்றது.
கிரிக்கெட் என்ற விளையாட்டு ஒரு வணிகப்பண்டமாக திகழ்கின்றது. அது ஒரு மதம் போல தன்னை உருவெடுத்துக் கொண்டது. பண்டைய சமூகத்தில் நிலவி வந்த அடிமை முறைகளும், தேவரடியார் முறைகளும் இன்று விளையாட்டு வீரர்களின் ஏல முறை, Cheer Leaders எனும் நடன மங்கைகள் என்ற வடிவில் தன்னை மீண்டும் உயிர்பித்துக் கொண்டது.
மேற்பார்வை நூல்கள்:
அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், காலச்சுவடு, 2009
விடுபூக்கள், தொ.பரமசிவன், கயல் கவின் பதிப்பகம், 2012
விடுபூக்கள், தொ.பரமசிவன், கயல் கவின் பதிப்பகம், 2012
தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள்,லெஸ்லி சி.ஒர், விடியல், 2005
பதினோராடல்கள், க.நர்மதா, அரிமா நோக்கு, காலண்டிதழ், சனவரி, 2013
வெள்ளி, 1 மார்ச், 2013
செய்திகளுக்கு அப்பால்...
பெருந்திரள் நினைவுகளும் தமிழக விவசாயிகளும்
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
குறள் 1038
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
மக்களின் பெருந்திரள் புத்தி என்பது தனித்தனி மனிதர்களிடையே சிதறுண்டிருக்கின்ற கருத்துகளின் ஒருங்கமைவு ஆகும். அது நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்துகளின் மீதான நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்குகின்றது. மக்களின் நினைவுகள் என்பது இன்றைய சூழலில் நிறுவனமயமாக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. மக்களின் பெருந்திரள் நினைவுகளை ஊடகங்கள் நிரனயிக்கின்றன. ஊடகங்கள், தற்போது நாம் கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை வடிவமைக்கின்றன.(Forbes magazine, 7/16/2012).
சமுக பிரச்சனைகள் என்பது, உண்மையில் அது ஒரு சமுக பிரச்சனையாக கருதப்படுவதில்லை. ஒரு சமுகம், தற்போதைய சமுக பிரச்சனை இன்னதென்று புரிந்துகொள்ள ஒரு பொதுத்தளம் தேவைப்படுகின்றது. தொல் சமுகத்தில் கூட்டு ஒருங்கமைவு என்பது பஞ்சாயத்து என்ற வடிவில் இருந்தது. இது அரசியல் பங்களிப்பு, வியாபாரம், சமுக நீதி என்ற தளங்களில் இயங்கி வந்தது. இது சமுக நலத்திற்கும் ஜனநாயகத்தினை உறுதி படுத்தவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இன்றைய சூழலில் கூட்டு ஒருங்கமைவு என்பதை ஊடகங்கள் என்ற எதிர்மறையான வடிவில் உள்ளது. அரசியல் பங்களிப்பு, வியாபாரம், சமுக நீதி என்ற தளங்களில் ஊடகங்களும் இயங்குகின்றது. ஆனால் இது ஜனநாயகத்தினை சார்ந்து இயங்கவில்லை.
சமுக அசைவியக்கத்தில் உற்பத்தி என்பது அடிநாதமாக விளங்குகின்றது. உற்பத்தி மற்றும் உழைப்பாளர்கள் மீது அக்கறை கொள்ளாத ஒரு சமுகம் உருப்பட வழியில்லை. இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகின்ற கிராமங்கள் பற்றிய சமுக அக்கறை இன்றைய ஊடகங்களுக்கு பெரிதும் இல்லை. உலகுக்கு அன்னம் அளந்த கைகள் நியாய விலைக்கடைகளில் விலையில்லா பரிசுப்பொருட்கள் வாங்க வரிசையில் காத்துக் கிடக்கின்ற அவலம் தான் இங்கு உள்ளது. பருவமழை பொய்த்தது, பொருளாதார மாற்றம் ஆகியன விவசாயிகளின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயம் காவேரி நதிநீரை நம்பியே உள்ளது. காவேரி நதிநீர் பிரச்சனை என்பதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பிரச்சனையாக ஊடகங்கள் உருவகப்படுத்துகின்றன. இதனை சமுக பிரச்சனையாக கருதாமல் இரு மாநில அரசியல் பிரச்சனையாக சித்தரிக்கப் படுவது நல்ல
மாற்றங்களை ஏற்படுத்தாது.
புதன், 12 டிசம்பர், 2012
God is a Medium, Media is a Devil
கடவுள் ஒரு ஊடகம், ஊடகம் ஒரு சாத்தான்...
தொன்மைச் சமுகத்தில், மக்களின் உற்பத்தி, உழைப்பு, வியாபாரம், பொழுதுபோக்கு, கலை ஆகியனவற்றை சமூகத்தோடு ஒருங்கிணைக்கும் ஒரு ஊடகமாகவே வழிபாடு என்ற அர்த்தத்தில் கடவுள் என்ற உருவகம் உருவகப்படுத்தபட்டிருக்கின்றது. நாற்று நடுவது முதல் தொடங்கி அறுவடை செய்து அதை சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்வதில் இருந்து கோயில் திருவிழா, கலை நிகழ்சிகள், விளையாட்டு என இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைக்க இனக்குழு மரபில் ஒரு கடவுளை மனிதன் உருவாக்கினான். அந்த கடவுள் சமுக அசைவியக்கங்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தார். அந்த கடவுள் மனிதனை தன் வழியில் சுயமாக கட்டிப்போட்டு நடக்கவிட்டார்.
சந்தை என்ற ஒன்றும், கரகாட்டம் போன்ற கலைநிகழ்வுகளும் சங்கமிக்கின்ற ஒரு இடமாக கிராமங்களில் கோயில் இருந்தது. சந்தை படுத்துதலிலும், கலை என்பதிலும் மக்களின் எண்ணங்களே கடவுளாக பிரதிபலித்தது.
உற்பத்தி சாதனங்களை கொண்ட ஒரு வர்க்கம், தனது கருத்தியலை உழைக்கும் வர்க்கத்தின் மீது மனதளவில் கட்டுப்படுத்த பயன்படும் கருத்தியல் உற்பத்தி சாதனம் தான் ஊடகம்.
The class which has the means of material production at its disposal has control at the same time over the means of mental production, so that thereby, generally speaking, the ideas of those who lack the means of mental production are subject to it. (Marx & Engels: The German Ideology, cited in Curran et al. 1982: 22)
Marshall McLuhan ஊடகம் என்பதை ஒரு பரந்துபட்ட ஒரு பார்வையில் பார்க்கின்றார். "ஊடகம் என்பது செய்தி " என இவர் கூறுகின்றார். ஊடகம் தன் மீது திணிக்கப்படும் கருத்துகளின் மூலம் அது சமுகத்தின் மீது எதிர் வினையாற்றுகின்றது என இவர் கூறுகின்றார்.
சமுக இயக்கத்தில், உற்பத்தி முறைக்கும், வெகுஜன உளவியலுக்கும் உள்ள மிகச் சிக்க
Robert Waterman McChesney என்ற தொடர்பியல் பேராசிரியர், குடியாட்சிக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கும் இடையே ஊடகங்களின் பங்களிப்பை இவர் விரிவாக வலியுறுத்துகின்றார். சமுதாய வானொலிகளும் சுய உதவி குழுக்களும் சமுதாய மாற்றத்திற்கு பங்கு வகிக்கின்றன என்பது இவர் கருத்து.லான தொடர்பை பற்றிய புரிதல் தான் ஊடகம் என Raymond Williams கூறுகின்றார்.
Robert Waterman McChesney என்ற தொடர்பியல் பேராசிரியர், குடியாட்சிக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கும் இடையே ஊடகங்களின் பங்களிப்பை இவர் விரிவாக வலியுறுத்துகின்றார். சமுதாய வானொலிகளும் சுய உதவி குழுக்களும் சமுதாய மாற்றத்திற்கு பங்கு வகிக்கின்றன என்பது இவர் கருத்து.லான தொடர்பை பற்றிய புரிதல் தான் ஊடகம் என Raymond Williams கூறுகின்றார்.
வெகுஜன ஊடகம் எனும் பூதம் :
ஆதிக்க வர்க்கம், கடவுளின் வேலையை ஊடகங்களுக்கு மாற்றிக் கொடுத்தது. கடவுளின் வேலையை ஊடகம் கையில் எடுத்துக் கொண்டது. இன்று ஒரு பொருள் உற்பத்தி, விளம்பரம், வியாபாரம் என சந்தை மயமாக்கல் தொடங்கி திரைப்படங்கள், இணையம் என எல்லாவற்றையும் ஊடகம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. இன்றைய தலைமுறையின் பொழுதுபோக்கு, விளையாட்டு என எல்லாம் ஊடகம் எனும் சாத்தான் வசம் மாறிப் போனது. இதன் பின்னால் உள்ள வர்க்க அரசியலின் சந்தைமயமாக்கல் என்ற பெரும்பூதம் உள்ளதை புரிந்து கொள்வது அவசியமாகின்றது.
References :
Marx, Karl and Frederick Engels. "The German Ideology." Ed. C. J. Arthur. New York: International Publishers, 1973.
McLuhan, Marshall. Understanding Media: The Extensions of Man. Cambridge: MIT Press, 1994.
Williams, Raymond. Marxism and Literature. Oxford: Oxford UP, 1977.
சனி, 9 ஜூன், 2012
நரிகள், ஊடகங்கள், ஆடுகள்
கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று சேர்ந்தாலே விளையாட்டு
கலைகட்டிடும். சிறுவர்கள் இவ்வாறு குழுவாக சேர்ந்து விளையாடும் போது குழு
உணர்வையும், சமுகத்தில் அவர்களது பங்களிப்பையும் உணர்ந்து கொள்கின்றனர்.
இவ்வாறு விளையாடப்படுகின்ற குழு விளையாட்டின் மூலமாக முன்னோர்கள் தன் இனத்தின் வரலாற்றினை சிறுவர்களுக்கு கற்று கொடுத்து வந்தனர். இன்றைய சூழலில் நாட்டார் விளையாட்டுகள் குறைந்து வந்ததன் விளைவாகவே இன்று சிறுவர்கள் இளம் வயதிலேயே தங்கள் கடமைகளை தவறியர்வர்களாக(Juvenile delinquent) வளர்கின்றனர்.
சில கிராமங்களில் "ஆடு நரி ஆட்டம்" என்றும் சில கிராமங்களில் "எலி பூனை
ஆட்டம்" என்றும் சில கிராமங்களில் "ஆடு புலி ஆட்டம்" என்றும் இவ்விளையாட்டு
அழைக்கப் படுகின்றது.
கால்நடை வளர்ப்பு சமூகத்தில் இருந்து வந்த மக்கள், காட்டில் ஆட்டுக் கிடை போட்டிருக்கும் போது நரியோ புலியோ வந்து வேட்டையாடி விடாமல் இருந்து காவல் காத்து வந்ததன் தொடர்ச்சியாக இவ்விளையாட்டு கிராமங்களில் இருந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது. தற்போது சில கிராமங்களில் மட்டும் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது.
"வல்லோன் வகுத்ததே வாய்க்கால்" என்று இருக்கின்ற சமூகத்தில் அனைவரும் சமூக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வலியவரிடம் இருந்து எளியவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும், வலியவராக இருந்தாலும் சமுக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பவற்றையும் வலியவரின் நயவஞ்சக சூழ்ச்சிகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் இவ்விளையாட்டு சிறுவர்களிடத்தில் மறைமுகமாக கற்பிக்கின்றது.
இந்த விளையாட்டினை சமுகத்தில் ஒப்பிடுகையில், ஆடு - மக்கள் சமுதாயத்தையும், நரி - முதலாளித்துவ சமுதாயத்தையும் குறியீடாக கருதலாம். இதில் சங்கிலியாக நிற்கும் சிறுவர்கள் ஊடகத்தினோடு ஒப்பிடலாம். ஆனால் இன்றைய உலகமயமான உலகில் நரிகளிடம் காவலர்கள் வேலை செய்தால் ஆட்டின் நிலைமை என்னவோ அதுதான் நிலவுகின்றது.
சமுகத்தில் தொடக்க காலத்தில் மக்களின் வெகுசன கருத்தியலை பேசும் ஊடகமாக நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்கள் இருந்தன. பிறகு அந்த இடத்தினை திரைப்படங்கள் பிடித்துக் கொண்டன. இன்று அந்த இடத்தினை தொலைக்காட்சி தொடர்கள் நிரப்புகின்றன. இது போக சிறுவர்களின் விளையாட்டினை எல்லாம் மாற்றியமைத்தது, கேலிச்சித்திர தொடர்களும்(cartoon programmes ), WWE, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், video games ம் காரணமாக அமைகின்றன.
வர்க்க போராட்டத்தை கற்றுத் தந்த விளையாட்டுகளை எல்லாம் அழித்து விட்டு, இந்த குடிமை சமூகத்தினை அடிமைப்படுத்தும் வகையில் விளையாட்டுகளை எல்லாம் மாற்றி அமைத்தது ஆதிக்க சமுதாயம். இதற்கு முழு பிரதிமை பெற்றவர்கள் மக்களே.
இவ்வாறு விளையாடப்படுகின்ற குழு விளையாட்டின் மூலமாக முன்னோர்கள் தன் இனத்தின் வரலாற்றினை சிறுவர்களுக்கு கற்று கொடுத்து வந்தனர். இன்றைய சூழலில் நாட்டார் விளையாட்டுகள் குறைந்து வந்ததன் விளைவாகவே இன்று சிறுவர்கள் இளம் வயதிலேயே தங்கள் கடமைகளை தவறியர்வர்களாக(Juvenile delinquent) வளர்கின்றனர்.
"சமூகம் தன் மீது கவியும் கருத்தியலை தான் விளையாட்டாக வெளிப்படுத்துகின்றது." - தொ. பரமசிவன்
பத்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டைத்
தொடங்குகின்றனர். சாட், பூட், த்ரீ போட்டோ அல்லது அவர்களாகவே
விருப்பப்பட்டு குழுவாக பிரிந்து இருவர் மட்டும் இறுதியில் தனிமைப்
படுத்தப் படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆடாகவும் மற்றொருவர் நரியாகவும்
இருப்பார். மற்ற சிறுவர்கள் எல்லாம் சங்கிலி போல கை கோர்த்து வட்டமாக
நிற்பர். ஆடாக இருப்பவரை வட்டத்திற்குள் நிற்க வைத்து அவரை நரியிடம்
இருந்து காப்பாற்றுவர். இவ்விளையாட்டு விளையாடப்படும் போது இவ்வாறு பாடல்
படுகின்றனர்.
"கண்டீகளா!! கண்டீகளா!!!
ஆட்டுக் குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்.. கண்டோம்...
ஆட்டுக் குட்டிய கண்டோம்...
எங்க...?
வீட்டுக்குள்ள...
வரலாமா!!?
வரக்கூடாது..."
இவ்வாறாகவும்,ஆட்டுக் குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்.. கண்டோம்...
ஆட்டுக் குட்டிய கண்டோம்...
எங்க...?
வீட்டுக்குள்ள...
வரலாமா!!?
வரக்கூடாது..."
"சங்கிலி புங்கிலி கதவத் தொற
நான் மாட்டேன் வேங்கைப்புலி
ஆட்டு குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்...
எங்க!!?
கொல்லையில...
வரலாமா!!?
ம்ஹும்..."
நான் மாட்டேன் வேங்கைப்புலி
ஆட்டு குட்டிய கண்டீகளா!!?
கண்டோம்...
எங்க!!?
கொல்லையில...
வரலாமா!!?
ம்ஹும்..."
கால்நடை வளர்ப்பு சமூகத்தில் இருந்து வந்த மக்கள், காட்டில் ஆட்டுக் கிடை போட்டிருக்கும் போது நரியோ புலியோ வந்து வேட்டையாடி விடாமல் இருந்து காவல் காத்து வந்ததன் தொடர்ச்சியாக இவ்விளையாட்டு கிராமங்களில் இருந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது. தற்போது சில கிராமங்களில் மட்டும் இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது.
"வல்லோன் வகுத்ததே வாய்க்கால்" என்று இருக்கின்ற சமூகத்தில் அனைவரும் சமூக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வலியவரிடம் இருந்து எளியவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும், வலியவராக இருந்தாலும் சமுக விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பவற்றையும் வலியவரின் நயவஞ்சக சூழ்ச்சிகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் இவ்விளையாட்டு சிறுவர்களிடத்தில் மறைமுகமாக கற்பிக்கின்றது.
இந்த விளையாட்டினை சமுகத்தில் ஒப்பிடுகையில், ஆடு - மக்கள் சமுதாயத்தையும், நரி - முதலாளித்துவ சமுதாயத்தையும் குறியீடாக கருதலாம். இதில் சங்கிலியாக நிற்கும் சிறுவர்கள் ஊடகத்தினோடு ஒப்பிடலாம். ஆனால் இன்றைய உலகமயமான உலகில் நரிகளிடம் காவலர்கள் வேலை செய்தால் ஆட்டின் நிலைமை என்னவோ அதுதான் நிலவுகின்றது.
சமுகத்தில் தொடக்க காலத்தில் மக்களின் வெகுசன கருத்தியலை பேசும் ஊடகமாக நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியங்கள் இருந்தன. பிறகு அந்த இடத்தினை திரைப்படங்கள் பிடித்துக் கொண்டன. இன்று அந்த இடத்தினை தொலைக்காட்சி தொடர்கள் நிரப்புகின்றன. இது போக சிறுவர்களின் விளையாட்டினை எல்லாம் மாற்றியமைத்தது, கேலிச்சித்திர தொடர்களும்(cartoon programmes ), WWE, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், video games ம் காரணமாக அமைகின்றன.
வர்க்க போராட்டத்தை கற்றுத் தந்த விளையாட்டுகளை எல்லாம் அழித்து விட்டு, இந்த குடிமை சமூகத்தினை அடிமைப்படுத்தும் வகையில் விளையாட்டுகளை எல்லாம் மாற்றி அமைத்தது ஆதிக்க சமுதாயம். இதற்கு முழு பிரதிமை பெற்றவர்கள் மக்களே.
ஞாயிறு, 20 மே, 2012
"உடை"யும் பண்பாடு
பண்பாடு என்பது கண்ணாடித் துண்டுகளில் தெரியும் சூரியனின் பிம்பம்
போன்றது. நித்தமும் பிம்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அதன் மூலப்பிரதி
என்றும் மாறுவதில்லை.
உடை என்பது வெறும் உடுத்திக் கொள்கின்ற ஆடை, உடலை மறைக்கின்ற துணி என்பதோடு மட்டுமில்லாமல் அது ஒரு சமுகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.
பண்பாடு என்பது சமூகவியல் பார்வையில் இரண்டு வகையாக பார்க்கப்படுகின்றது.
பொருண்மைத் தன்மை : Material culture
ஒரு இன மக்கள் பயன் படுத்துகின்ற பொருட்கள், வீடுகள், தெரு அமைப்புகள், வழிபாட்டு தளங்கள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை தீர்மானிக்கும் பண்பாடானது பொருண்மைத் தன்மையுடையது.
பொருண்மைத் தன்மையற்றது : Non-material culture
இது ஒரு சமுகத்தில் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சமுக ஒழுக்கங்கள் ஆகியவற்றை சார்ந்தது. இதன் மூலம் பண்பாடு ஒருவனது எண்ணங்கள், உணர்வுகள், நடவடிக்கைகளை வடிவமைக்கின்றது. பொருண்மைத் தன்மையற்ற பண்பாட்டினை தீர்மானிக்கும் நான்கு முக்கிய காரணிகள் , குறியீடுகள், மொழி, சமுக மதிப்பீடுகள், சமுக நெறிமுறைகள் ஆகியன.
இந்த கருத்தை நாம் உடுத்துகின்ற உடையுடன் ஒப்பிடுகையில் உடையானது ஒரு பண்பாட்டின் அடையாளமாக விளங்குவதை உணர்ந்து கொள்ளலாம். நாம் உடுத்துகின்ற ஆடை ஓவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. தமிழ் நாட்டில் பெரும்பாலோனோர் அணியும் ஒரு ஆடையாக லுங்கி உள்ளது. இதனை ஈழத்தில் சரம் என்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஈழத்தினை சேர்ந்த தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஒரு சிறு வேற்றுமை காணப்படுகின்றது. இங்கு புவியியல் இடம் சார்ந்து வேறு படுகின்றது. கிராமங்களில் வசிப்பவர்கள் கட்டுவதற்கும், கடற்கரையோரம் மீன் பிடிப்பவர்கள் கட்டுவத்ர்க்குமே வேறு பாடு உள்ளது. இங்கு தொழில் முறை சார்ந்து வேறு படுகின்றது. இதில் வயது சார்ந்த வேறு பாட்டையும் காணலாம். ஊரில் இளவட்டப் பையன்கள் கட்டுவதற்கும், பெரியவர்கள் லுங்கி கட்டுவதற்கும் கூட வேறுபாடு உள்ளது.
உடை என்பது வெறும் உடுத்திக் கொள்கின்ற ஆடை, உடலை மறைக்கின்ற துணி என்பதோடு மட்டுமில்லாமல் அது ஒரு சமுகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.
பண்பாடு என்பது சமூகவியல் பார்வையில் இரண்டு வகையாக பார்க்கப்படுகின்றது.
- பொருண்மைத் தன்மையுடையது.
- பொருண்மைத் தன்மையற்றது.
பொருண்மைத் தன்மை : Material culture
ஒரு இன மக்கள் பயன் படுத்துகின்ற பொருட்கள், வீடுகள், தெரு அமைப்புகள், வழிபாட்டு தளங்கள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை தீர்மானிக்கும் பண்பாடானது பொருண்மைத் தன்மையுடையது.
பொருண்மைத் தன்மையற்றது : Non-material culture
இது ஒரு சமுகத்தில் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சமுக ஒழுக்கங்கள் ஆகியவற்றை சார்ந்தது. இதன் மூலம் பண்பாடு ஒருவனது எண்ணங்கள், உணர்வுகள், நடவடிக்கைகளை வடிவமைக்கின்றது. பொருண்மைத் தன்மையற்ற பண்பாட்டினை தீர்மானிக்கும் நான்கு முக்கிய காரணிகள் , குறியீடுகள், மொழி, சமுக மதிப்பீடுகள், சமுக நெறிமுறைகள் ஆகியன.
இந்த கருத்தை நாம் உடுத்துகின்ற உடையுடன் ஒப்பிடுகையில் உடையானது ஒரு பண்பாட்டின் அடையாளமாக விளங்குவதை உணர்ந்து கொள்ளலாம். நாம் உடுத்துகின்ற ஆடை ஓவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. தமிழ் நாட்டில் பெரும்பாலோனோர் அணியும் ஒரு ஆடையாக லுங்கி உள்ளது. இதனை ஈழத்தில் சரம் என்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஈழத்தினை சேர்ந்த தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஒரு சிறு வேற்றுமை காணப்படுகின்றது. இங்கு புவியியல் இடம் சார்ந்து வேறு படுகின்றது. கிராமங்களில் வசிப்பவர்கள் கட்டுவதற்கும், கடற்கரையோரம் மீன் பிடிப்பவர்கள் கட்டுவத்ர்க்குமே வேறு பாடு உள்ளது. இங்கு தொழில் முறை சார்ந்து வேறு படுகின்றது. இதில் வயது சார்ந்த வேறு பாட்டையும் காணலாம். ஊரில் இளவட்டப் பையன்கள் கட்டுவதற்கும், பெரியவர்கள் லுங்கி கட்டுவதற்கும் கூட வேறுபாடு உள்ளது.
உடையானது பண்பாட்டு அளவில் அது பொருண்மைத் தன்மையுடையதாக
உள்ளது. கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, ஜிப்பா என பல வகைகள்
உள்ளன. ஆனால் அவை காலம் சார்ந்தும் சூழ்நிலை சார்ந்தும் அவற்றை
அணிகின்றனர். இங்கு அதன் பொருண்மைத் இழந்து போய் விடுகின்றது.
திருமண நிகழ்சிகளிலும், கோயில் திருவிழாக்களின் போதும் லுங்கி
அணிவதில்லை. அன்றைய தினங்களில் வேட்டி அணிவதையே விரும்புகின்றனர். ஒரு சமுக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், கோயிலுக்கு
செல்லும் போது வேட்டி தான் கட்ட வேண்டும், கோயிலுக்குள் வேட்டி மடித்து
கட்டக் கூடாது என்ற நம்பிக்கைகள் உள்ளது. பெரும்பாலும் திருவிழா நாட்களில்
புது துணி வாங்குவது வழக்கம்.
ஆடி மாதங்களில் தள்ளுபடிக்கு துணி வாங்குதல்
இங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஆடி மாதம் என்பது சடங்கு என்பதையும்
தாண்டி ஒரு வியாபாரத்தந்திரமாக துணிக்கடைகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த
துணிக்கடைகள் விற்கும் துணிகள் நமது பண்பாட்டை சாராதவை என்ற போதிலும் அதனை
விற்க நமது மக்களிடையே உள்ள பண்பாட்டு, மதம் சார்ந்த நம்பிக்கை தேவை
படுகின்றது. இங்குதான் நமது சமுகம் எனும் கண்ணாடியில் பண்பாட்டு சூரியனின்
நிழல் உடைகின்றது.
புதன், 18 ஏப்ரல், 2012
இன்னும் மறுபிறவிதான்...
கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி, தூத்துக்குடியில் கர்ப்பிணிப் பெண் இறந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சேது லட்சுமியை அப்பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயக்கயியல் மருத்துவரான சேதுலட்சுமி சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சயளித்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என கூறுவர். கிராமங்களில் புள்ளத்தாச்சி பெண்கள் மரணமடைந்தால் அவர்களின் நினைவாக சுமைதாங்கி கல்கள் வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. அன்று போதிய மருத்துவ வசதி இன்மையால் பல பெண்கள் இறந்து வந்தனர். ஆனால் இன்று மருத்துவ வசதிகள் வளர்ச்சி அடைந்து உள்ள போதும் பெண்களுக்கு பிரசவம் என்பது ஒரு மறுபிறவியாகவே இருந்து வருகின்றது. சுகப்பிரசவம் என்பது தற்பொழுது அரிதாகவே உள்ளது. இதற்கு சில தனியார் மருத்துவமனைகளே காரணமாகின்றன.
பிரெஞ்சு தத்துவவாதி மைக்கல் பூக்கோ, "மருத்துவமனைகள், வகுப்பறை, சிறைச்சாலை" ஆகியவை மூன்றும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை என குறிப்பிடுகின்றார். இவரது கருத்துப்படி, முற்றிலும் அறநெறிகளை துறந்து விட்ட ஒரு சமூகம், வணிக மயமாகிவிட்ட மருத்துவத்துறையில் உயிர்களின் மீது அக்கறை குறைந்து பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படுகின்றது.
சமீபத்தில் கொல்கத்தா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேலானோர் இறந்தனர். இச்சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையில் மருத்துவமனையில் பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என காவல்துறையினரால் கூறப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் மருத்துவர் ஒருவர் பள்ளியில் படிக்கும் தன் மகனைக் கொண்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது போக பணத்திற்காக சில தனியார் மருத்துவமனைகள் சுகப்பிரசத்தினைக்கூட அறுவை சிகிச்சை அளித்து லாபம் பார்க்கின்றனர். இதுபோக மாறிவருகின்ற உணவு பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இன்மை, பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு என்பன போன்ற காரணங்களால் பிரவத்தின் போது மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டிற்கான சி.என்.என். நாயகன் விருதினை ராபின் லிம் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவில் தாய்மையடையும் பெண்களுக்கு மருத்துவ சேவையினை ஆற்றி வருகின்றார். ஆரோக்கிய அன்னை பூமி இயக்கம் மூலம் கர்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவ சேவை செய்து வருகின்றார்.
ஒவ்வொரு குழந்தையின் முதல் மூச்சுக் காற்றும் பூமியில் படும்போது அமைதியையும் அன்பையும் சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு அன்னையும் திடமான ஆரோக்கியமான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை"யும் பாதுகாப்பாக பிறக்க வேண்டும். ஆனால் இந்த பூமியில் எங்கும் இது போல நடக்க சாத்தியமில்லை" என ராபின் லிம் கூறுகின்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என்ற தகவலை உலக சுகாதார மையம் அளிக்கின்றது. இதில் இந்தியாவில் 47.57/1000 என்ற விகிதத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் உள்ளதாக தகவலை அளிக்கின்றது.
பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.
லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.
சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது.
மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இந்த காலத்திலும் குழந்தை பிறப்பது என்பது பெண்ணுக்கு மறு பிறவியாகவே இருந்து வருகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




